பிக்பாஸ்க்கு நன்றி சொன்ன தாமரை… அதுக்குள்ள நன்றியா… இன்னும் இருக்கு என்று கலாய்த்த ஹவுஸ்மேட்ஸ் !
சென்னை : பிக் பாஸ் இல்லத்தில் நுழைந்த முதல் நாளே கேமரா முன் நின்று பிக் பாஸ்க்கு தாமரை செல்வி நன்றி கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களையும் கமல் அறிமுதல் செய்துவைத்தார்.
இதில், நாட்டுப்புற பாடகி, ராப் பாடகி, கானா பாடகி, நடிகர், நடிகை, தொகுப்பாளர் என பல துறைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பிக் பாஸ் இல்லத்தில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

பேய் கதை
இன்றைய எபிசோடில் ராஜு, வருண், ராப் பாடகி ஐக்கி பெரி, மாடல் அழகி அக்ஷரா, தாமரை செல்வி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது பேய் கதை சொல்லவா என்று கதை சொல்லத் தொடங்குகிறார் ராஜு. தாமரை பேய் கதை எல்லாம் வேண்டும் என்று கூறியும் விடாமல் தொடர்ந்த கதை சொல்கிறார் ராஜு.

அலறிய தாமரை
ராஜு சொல்லும் கதை கேட்டுக்கொண்டு அங்கு இருப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். திடீரென தாமரை செல்வியை பயமுறுத்தும் வகையில் ராஜு அவர் காதுக்கிட்ட போய் விரல் எங்கேனு கேட்டுச்சு என்று கத்தி அவரை பயமுறுத்துகிறார். இதனால் தாமரை அலறியபடி கத்துகிறார்.

நன்றி பிக் பாஸ்
இதையடுத்து, பாத்ரூமில் வருணிடம் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் தாமரை எப்படி சந்தோஷமா இருக்காணு நினைப்பாங்க என்றார். அதற்கு வருண் இப்படித்தான்கா சிரிச்சிட்டு இருக்கணும் என்று கூறினார். அதற்கு தாமரை நான் இப்படி சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சு என்று கூறிக்கொண்டே, பாத்ரூமில் இருக்கும் கேமரா முன் நின்று ரொம்ப நன்றி பிக் பாஸ் நான் இப்படி சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சு என்று கூறினார். அதுக்குள்ள நன்றி எதுக்கும் இன்னும் நிறைய அழவைப்பாங்க என்று மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை கலாய்த்தனர்.


Click it and Unblock the Notifications











