twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்துடன் ஃபோட்டோ எடுத்த மருத்துவமனை ஊழியர்...பின்னணியில் நடந்த விவகாரம் இதுதான்

    |

    சென்னை : கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை தீவிரமடைந்திருந்த போது, தமிழகம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இந்த வீடியோ வெளியோகி பரபரப்பை கிளப்பியது.

    'எனிமி' படப்பிடிப்பை முடித்த ஆர்யா… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !'எனிமி' படப்பிடிப்பை முடித்த ஆர்யா… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !

    இதனால் அஜித் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் உடல்நிலைக்கு ஏதும் இல்லை எனவும், இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் எனவும் பின்னர் அஜித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ரசிகர்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    அஜித்துடன் ஃபோட்டோ எடுத்த மருத்துவமனை ஊழியர்

    அஜித்துடன் ஃபோட்டோ எடுத்த மருத்துவமனை ஊழியர்

    அதே சமயம், அஜித் மருத்துவமனைக்கு வந்த போது, அந்த மருத்துவமனை ஊழியர் ஃபர்சானா, அஜித் உடன் ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டார். இதை சமீபத்தில் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனையடுத்து, மருத்துவமனை விதிகளை மீறியதாக ஃபர்சானாவை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

    பணிநீக்கம் செய்த மருத்துவமனை

    பணிநீக்கம் செய்த மருத்துவமனை

    ஃபர்சானா தரப்பில் மன்னிப்பு கேட்ட பிறகும் அதை ஏற்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. ஃபர்சானாவை மீண்டும் பணிக்கு சேர்க்கவும் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் அஜித்தை தொடர்பு கொண்டு உதவி கேட்க, ஃபர்சானா முயன்றுள்ளார்.

    மேனேஜரிடம் உதவி கேட்ட நர்ஸ்

    மேனேஜரிடம் உதவி கேட்ட நர்ஸ்

    அஜித்தை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாததால், அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவை ஃபர்சானா தொடர்பு கொண்டு, தனது வேலையை திரும்பப் பெற உதவி செய்யும்படி கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் சந்திரா, இது மருத்துவமனை நிர்வாகத்தின் முடிவு என்பதால் இதில் அஜித் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

    உதவ முன் வந்த அஜித்

    உதவ முன் வந்த அஜித்

    இந்த விவகாரம் பற்றி மேனேஜர் மூலம் அறிந்த அஜித், ஃபர்சானாவின் மகளின் அடுத்த ஒராண்டு பள்ளி கட்டணத்தை தானே செலுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கிடையில் தற்கொலைக்கு முயன்ற ஃபர்சானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

     போலீஸ் புகார் அளித்த மருத்துவமனை ஊழியர்

    போலீஸ் புகார் அளித்த மருத்துவமனை ஊழியர்

    சிகிச்சை முடிந்து வந்த ஃபர்சானா, சுரேஷ் சந்திரா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சுரேஷ் சந்திரா தன்னை ஏமாற்றி விட்டதாக ஃபர்சானா குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து சுரேஷ் சந்திராவிடம் கேட்ட போது, அவர் அதை மறுத்துள்ளார்.

    அஜித் காரணமல்ல

    அஜித் காரணமல்ல

    மேலும் சுரேஷ் சந்திரா கூறுகையில், ஃபர்சானா பணி நீக்கம் செய்யப்படுவதற்கு அஜித் காரணம் அல்ல. சிசிடிவி கேமிராவை ஆராய்ந்து அதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இருந்தாலும் அஜித் தானாக முன்வந்து, ஃபர்சானாவின் மகளின் படிப்பிற்கு உதவ முன்வந்தார்.

    கையில் பணம் கேட்ட மருத்துவமனை ஊழியர்

    கையில் பணம் கேட்ட மருத்துவமனை ஊழியர்

    ஆனால் பள்ளி கட்டணத்தை நேரடியாக பள்ளி நிர்வாகத்திடம் செலுத்த வேண்டாம் எனவும், தன் கையில் தருமாறும், தானே அதை செலுத்திக் கொள்வதாகவும் ஃபர்சானா கேட்டார். பிறகு என் மீது போலீஸ் புகாரும் அளித்தார். அதனால் அவருடன் பேசுவதை நான் நிறுத்தி விட்டேன் என்றார்.

    அஜித் தான் முடிவு சொல்லனும்

    அஜித் தான் முடிவு சொல்லனும்

    இது பற்றி ஃபர்சானா கூறுகையில், நான் என் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கிறேன். வேலையை இழந்த பிறகு உதவி செய்ய யாரும் இல்லாமல் உள்ளேன். நடிகர் அஜித் நேரடியாக தலையிட்டு எனக்கு உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அஜித் தான் இதற்கு நல்ல தீர்வை சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    English summary
    I merely want a word from Ajith sir says Farzana
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X