சினிமாவா? சீரியலா?.. ரீ என்ட்ரியால் சீரியலுக்கே புதிய வரலாறு எழுதிய நடிகைகள்!
சென்னை: ஒரு காலத்தில் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த பல நடிகைகள், திருமணம்,குழந்தை பிறப்பு, உடல்நலம் பாதிப்பு போன்ற காரணங்களால் சினிமாவிட்டு விலகி விடுகின்றனர். அப்படி கொடி கட்டி பிறந்த நடிகை மீண்டும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரையில் அதிரடியாக என்ட்ரி கொடுத்து சீரியலின் TRP ஓட்டத்தையே மாற்றும் தரமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த நடிகைகளை பற்றித்தான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம்.
வெள்ளித்திரையா.. சின்னத்திரையா என்ற பேச்சு வந்ததுமே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் நடிகை ராதிகா தான். சினிமாவில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கொடுத்து முன்னணி நடிகை என பெயர் எடுத்த ராதிகா சரத்குமார். சின்ன திரையிலும் ஒரு ரவுண்டு வந்தார். இயக்கிய சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி போன்ற தொடர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இல்லத்தரசிகள் மத்தியில் அனைவருக்கும் பிடித்த நடிகையாகவே மாறினார். தற்போதும் ராதிகா சீரியல், சினிமா என இரண்டிலும் வெற்றிகரமாக சவாரி செய்து வருகிறார்.

நளினி: 80 கால கட்டத்தில் முதன்மை ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நளினி. இவர் மோகனுடன் நடித்த 100 வது நாள் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. சினிமாவில் உச்சத்தில் இருந்த நளினி ராமராஜனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டுவிலகினார். இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் நளினி ராமராஜனைவிட்டு பிரிந்து மீண்டும் நடிக்க வந்தார். ஜெயம் படத்தில் என்ட்ரி கொடுத்த நளினி, 2000 ஆம் ஆண்டு கிருஷ்ணதாசி சீரியலில், மனோன்மணி என்கிற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார். இன்று வரை நளினி சின்னத்திரையில் அடுத்தடுத்த பல தொடர்களில் நடித்து வருகிறார்.
தேவயானி: நடிகை தேவயானியின் திரைப்பயணத்தை மாற்றிய திரைப்படம் என்றால் அது அஜித்துடன் நடித்த காதல் கோட்டை திரைப்படம் தான். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யவம்சம், நினைத்தேன் வந்தாய், நீ வருவாய் என, பாரதி, தெனாலி, ஆனந்தம் என அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். அதன்பின் சினிமாவிற்கு போகாமல் சீரியலில் கோலங்கள் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். கோலங்கள் சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த தேவயானி. தற்போது, சினிமாவிலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்வாதி: தமிழ், தெலுங்கு, கன்னடம் , இந்தி படங்களில் நடித்துள்ள ஸ்வாதி, 1995 ஆம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக தேவா திரைப்படத்தில் அறிமுகமானார் . வசந்த வாசல், செல்வா, மாப்பிள்ளை கவுண்டர், உன்னை தேடி, அண்ணன் போன்ற பல படத்தில் நடித்து வந்த ஸ்வாதி திடீரென சினிமாவில் காணாமல் போனார். இதையடுத்து தற்போது ஸ்வாதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் சீரியலில் முக்கியமான ரோலில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











