Don't Miss!
- Technology
ஆப்பிள் வாட்சால் ஜிமிற்குள் அதிரடியாக நுழைந்த 15 ஆயுதம் ஏந்திய போலீஸ்.! அங்கே என்னாச்சு தெரியுமா?
- Finance
8 இல்ல 11 டாலர்.. ட்விட்டர் ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் உயர்வு.. யாருக்கு பாதிப்பு..?!
- Automobiles
வாகனங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமா குவிஞ்சிருக்காங்க... எத்தனை பேரு விசிட் பண்ணாங்க தெரிஞ்சா அசந்திருவீங
- Lifestyle
பிறப்புறுப்பை சுற்றி இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பாலியல் தொற்றுநோய் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- News
பழனி முருகன் கோவில் குடமுழுக்கில் தமிழ் அர்ச்சனை ஒலிக்க வேண்டும்..பெ.மணியரசன் வலியுறுத்தல்
- Sports
72 மணி நேர கெடு.. மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்.. WFI தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை!
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மீட்கப்பட்ட கதை: கவனம் ஈர்க்கும் Thirteen Lives திரைப்படம்
சென்னை: கடந்த 2018ம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள குகையில் 12 சிறுவர்களும் கால்பந்து அணியின் பயிற்சியாளரும் சிக்கினர்.
பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு குகையில் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள 'Thirteen Lives' திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்தி
படங்களில்
கதையே
இல்லை..அரச்ச
மாவையே
அரைக்குறாங்க..மனம்
நொந்த
பாலிவுட்
இயக்குநர்!

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகையில், கடந்த 2018ல் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளர் ஏக்போலினும் சாகச பயணம் சென்றனர். அப்போது திடீரென பெய்த கனமழையால், அந்த குகைக்குள் சென்ற சிறுவர்கள் அனைவரும் மாயமாகினர். இந்த சம்வம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அதோடு சிக்கிய சிறுவர்களை மீட்க பல நாடுகளும் தாய்லாந்துடன் கை கோர்த்தது.

பத்திரமாக மீட்கப்பட்ட சிறுவர்கள்
17 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து பலகட்ட போராட்டங்களை நடத்தினர். குகையில் சிறுவர்கள் உயிருடன் இருப்பதை, 8 நாட்களுக்குப் பின்னர் தான் கண்டுபிடித்தனர். அதுவரை உணவு, தண்ணீர் இன்றி அவர்களை தளர்ந்துவிடாமல் பாதுகாத்தது கால்பந்து பயிற்சியாளர் ஏக்போலின் சொல்லிக்கொடுத்த தியானங்கள் தான். இறுதியாக குகைக்குள் சிக்கியிருந்த அனைவரும் 18 நாட்களுக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில், தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன், குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்துவிட்டுத் திரும்பி வரும் வழியில் உயிரிழந்தார்.

திரைப்படமாக உருவாகிய மீட்பு பணி
இந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு 'Thirteen Lives' என்ற படத்தை இயக்கியுள்ளார் ரோன் ஹோவர்ட். ஆஸ்கர் விருது வென்ற இயக்குநரான இவர், பல வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார். கோலின் ஃபார்ரெல், விகோ மோர்டென்சன், ஜோயல் எட்கெர்டன், டோம் பேட்மேன் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ள இப்படம், அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் மீட்பு பணி வீரர்களாக நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அருமையான தொழில்நுட்பத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.

உண்மையை கண்முன் காட்டிய படைப்பு
பாறைகள் அதிகம் இருந்த கரடுமுரடான குகையில், ஒருகிலோ மீட்டர் தூரத்தில் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அதற்கு இங்கிலாந்து குகை மீட்பு வல்லுநர்கள் எடுத்த துணிச்சலான முடிவு தான் கை கொடுத்தது. அவர்கள் தான் சிறுவர்கள் உயிருடன் இருப்பதை முதலில் கண்டறிந்தனர். அதனால் அவர்கள் திட்டத்துக்கு தாய்லாந்து அரசு பச்சைக் கொடி காட்டியது. இவையனைத்தையும் திரையில் பார்க்கும் போது மனம் அப்படி பதைபதைக்கிறது.

இப்படித்தான் மீட்கப்பட்டனர்
குகையில் சிக்கியிருந்த சிறுவர்கள் ஏற்கனவே அச்சத்தில் இருந்ததால், அவர்கள் அனைவரையும் மயக்க ஊசிப் போட்டு மீட்கப்பட்டனர். திரைப்படத்தில் இந்தக் காட்சிகள் அனைத்தும் பார்ப்பதற்கு திக்திக் என இருக்கிறது. இயக்குநர் ரோன் ஹோவர்ட் உண்மையை அப்படியே கண்முன்னால் காட்டியுள்ளார். மனிதத்தை விடவும் சிறந்தது வேறெதும் இல்லை என்பதை, இந்த சம்பவம் காட்டியது. அதனை நெருக்கமாக உணரவைத்துள்ளது 'Thirteen Lives' திரைப்படம்.

அட்டகாசமான மேக்கிங்
படம் தொடங்கியதுமே நேரடியாக கதைக்குள் சென்றுவிடுகிறது. அதிலிருந்து படம் முடியும் வரை ரசிகர்களையும் குகைக்குள் கொண்டுபோய் விடுகிறது ஒளிப்பதிவு. அதேபோல், பின்னணி இசையில் பெஞ்சமின் வால்ஃபிஸ்க் மிரட்டியுள்ளார். எடிட்டிங் உள்ளிட்ட படத்தின் ஒட்டுமொத்த மேக்கிங்கும் தரமாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இத்திரைப்படம், அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது.