துப்பாக்கி 2 கதை தான் மதராஸி?... விஜய் பாணியில் சிவகார்த்திகேயன்!

சென்னை: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மதராஸி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் பழைய டைட்டில் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை பார்க்கையில் இப்படம் துப்பாக்கி 2 படத்தின் கதை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

துப்பாக்கி 2 மதராஸி?.: பழைய பட டைட்டில் செண்டிமெண்ட் சிவகார்த்திகேயனுக்கு நல்ல ஹிட்டான படங்களாக அமைவதால் அதேபோன்று மதராஸி டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் துப்பாக்கி 2 தான் என தகவல் கசிந்துள்ளது. விஜய் நடித்த கோட் படத்தில் விஜயிடம் இருந்து சிவகார்த்திகேயன் துப்பாக்கியை கையில் வாங்கும் காட்சிக்கு திரையரங்கில் விசில் சத்தம் காதை கிழித்தன.

madharasi Sivakarthikeyan A R Murugadoss

அதற்கேற்றார்போல் அமரன் பட புரோமோஷன் நிகழ்ச்சியிலும் துப்பாக்கி கனம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு சிரித்து கொண்டே கையில் வாங்கும் போது தெரியவில்லை. இப்போது கொஞ்சம் கனமாகத்தான் இருக்கிறது என சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இதனால், விஜய் துப்பாக்கியை கையில் கொடுத்ததால், இப்படம் கண்டிப்பாக துப்பாக்கி 2 தான் என நெட்டிசன்கள் வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். விஜய் கொடுத்த துப்பாக்கியா அது என கமாண்ட் செய்து வருகின்றனர்.

மதராஸி படத்தின் கதை இதுவா?: துப்பாக்கி 2 என நெட்டிசன்கள் தெரிவித்து வந்தாலும், அப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை காணும்போது ஆக்சன் காட்சிகள் ரத்தம் தெறிக்கும் அளவிற்கு எதிர்பார்ப்பை எகிற செய்கிறது. மேலும், சிவகார்த்திகேயன் ஒரு டிஸ்ஆர்டர் பிரச்னையில் இருப்பது போன்றும் தெரிகிறது. ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாகியுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிக்கும்படி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளது. கதைக்களம் இதுதான் என யூகிக்க முடியாத வகையில் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஒரே பாணியில் இயக்கும் ஏ.ஆர்: தொடர் தோல்வியில் இருந்து தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடுமையாக உழைத்து வருகிறார். நடிகர்கள் புதிது என்றாலும் கதை ஒன்று தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் படங்கள் என்றாலே ஒன்று தீவிரவாத கும்பல், மற்றொன்று பாகிஸ்தானை சேர்ந்தவர் வில்லனாக இருப்பார்கள் என்றே கூறுகின்றனர். மக்கள் ரசிக்கும் படி பிரிவினை இல்லாத, வெடிகுண்டு, துப்பாக்கி இல்லாமல் கூட படம் எடுக்கலாம். மீண்டும் ஒரு மசாலா குண்டு பாகிஸ்தானில் இருந்து வரப்போகிறது என்றும் காட்டமாக விமர்சிக்கின்றனர்.

மக்களை பிளவுப்படுத்துவது போன்ற கதைதான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு தெரியும் என்றும் அதிலும் ஒரு இஸ்லாமியர் வில்லனாக இருக்கவும் வாய்ப்புண்டு எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

துப்பாக்கியில் ஸ்லீப்பர்செல்: கஜினி படத்தில் சூர்யாவை தன்னை யார் என்றே மறந்திருப்பார். துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல் குறித்த ஐடியாக்கள் புதிதாக இருந்தாலும், இஸ்லாமியர்களை இன்னும் எத்தனை காலத்திற்குதான் வில்லனாக சித்தரிப்பீர்கள் என்ற கோபத்துடன் நெட்டிசன்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர். பழைய முருகதாஸை திரையில் காண காத்திருப்பதாகவும் அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Read more about: sivakarthikeyan a r murugadoss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X