இந்தியில் வெளியாகும் விக்ரம் படத்தின் ட்ரெயிலர் வெளியானது... என்ன டைட்டில்னு தெரியுமா?

சென்னை : 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம்.

லோகேஷ் கனககராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

The stunning Vikram Hit list movie Hindi Trailer released!

உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை எப்போதும் கட்டிப் போட்டு வருபவர். இவரது படங்கள் உலகளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. அரசியல், பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இவர் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது கமலின் நடிப்பில் விக்ரம் படம் வரும் ஜூன் 3ல் ரிலீசாகவுள்ளது. ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்களும் நடிப்பில் மிரட்டியுள்ளனர். சமீபத்தில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியான நிலையில், ட்ரெயிலர் படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. ஜூன் 3ம் தேதிக்காக ரசிகர்கள் தற்போதே காத்திருக்கின்றனர்.

The stunning Vikram Hit list movie Hindi Trailer released!

படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள நிலையில் இந்தியில் படத்தின் பெயர் விக்ரம் ஹிட் லிஸ்ட் என்று வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் இந்தியில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்தப்படத்தை திரையில் சென்று பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் எனர்ஜியுடன் கமல்ஹாசனை பார்க்க முடிகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில், அதில் சிறப்பான நடனம் ஆடி கமல்ஹாசன் அசத்தியுள்ளார். மேலும் பாடல்கள் மட்டுமின்றி படத்தின் டீசர், ட்ரெயிலர், போஸ்டர்களும் மிகவும் சிறப்பாக காணப்படுகின்றன. ட்ரெயிலரில் மிரட்டலான விஜய் சேதுபதியை பார்க்க முடிந்தது. கண்ணாடி சகிதம் அவர் வித்தியாசமாக காணப்படுகிறார். இதுவும் படத்திற்கான எதிர்பார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. படத்தில் சூர்யாவும் கேமியோ ரோலில் நடித்துள்ளதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு மாஸான எக்ஸ்பீரியன்சை கொடுக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X