வெயிலை உற்சாகமாக வரவேற்ற நஸ்ரியா... ரசிகர்களை வென்ற சிரிப்பு!
கொச்சி : தமிழில் ராஜா ராணி உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா நாசிம்.
பிசியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில், திருமணமாகி செட்டில் ஆனார்.
ஆயினும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிசியாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

குழந்தைதனமான சிரிப்பு
தமிழ், மலையாளம் உள்ளிட்டவற்றில் மிகவும் பிசியாக நடித்துவந்த நடிகை நஸ்ரியா நாசிம், ரசிகர்களின் மனதை தன்னுடைய குழந்தைதனமான சிரிப்பு மற்றும் இயல்பான நடிப்பால் கொள்ளை கொண்டவர். பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

புகைப்படங்கள், வீடியோ பதிவு
தற்போது மீண்டும் சில படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் மிகவும் பிசியாக அவ்வப்போது பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் ரசிகர்களையும் தன்னுடைய பதிவுகளின் மூலம் கட்டிப் போட்டு வருகிறார்.

வெயிலை வரவேற்ற நஸ்ரியா
தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவில் வெயில் மீண்டும் வந்துவிட்டதாகவும், ஆனால் அதை தான் கொண்டாட்டத்துடன் எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சூரியன் மற்றும் சிரிப்பு எமோஜிகளையும் அவர் தனது ட்வீட்டில் பயன்படுத்தியுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்
மேலும் வெயிலை எதிர்கொள்ளும்வகையில் இரண்டு புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை அள்ளும்வகையில் உள்ளது. காலை வெயிலில் எடுக்கப்பட்டுள்ளது இந்த புகைப்படங்கள். வெயிலையில் கொண்டாட உங்களால மட்டும்தான் முடியும் நஸ்ரியா மேடம்.


Click it and Unblock the Notifications











