என்னது அட்லீ அணிந்திருந்த டி ஷர்ட் இத்தனை லட்சமா?.. மனுஷன் வாழ்றாரே ப்பா
சென்னை: அட்லீ இயக்கத்தில் கடைசியாக ஜவான் திரைப்படம் வெளியானது. ஷாருக்கான் நடித்திருந்த அந்தப் படம்தான் அட்லீ இயக்கிய முதல் ஹிந்தி படம். ஏற்கனவே இங்கிருந்து ஹிந்திக்கு சென்று வெற்றியடைந்த தமிழ் இயக்குநர்கள் லிஸ்ட்டில் அவரும் சேர்வாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில்; படம் மெகா ஹிட்டாகி அந்த லிஸ்ட்டில் அவரையும் சேர்த்தது. தற்போது அவர் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை தயாரித்திருக்கிறார்.
விஜய்யை வைத்து வரிசையாக மூன்று படங்களை இயக்கி அவற்றில் இரண்டு படங்களை வெற்றி படமாக கொடுத்தவர் அட்லீ. பிற படங்களிலிருந்து காப்பி அடிக்கிறார் என்று அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டாலும் தனது மேக்கிங்காலும், மாஸான சீன்களாலும் அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கியவர் அவர். அதேபோல் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து வந்தவர் என்றால் ஏதேனும் ஒரு பிரமாண்டத்தையும் படத்தில் நிகழ்த்திவிடுவார் அட்லீ.

ஹிந்தியில் என்ட்ரி: தமிழில் நான்கு படங்களை இயக்கி மூன்று படங்களை சூப்பர் டூப்பர் ஹிட்டாக கொடுத்த அட்லீ ஹிந்திக்கு சென்றார். பாலிவுட்டில் இவரால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்வியைத்தான் அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியபோது பலரும் கேட்டார்கள். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் என தென்னகத்து கலைஞர்களை இறக்கினார். இதன் காரணமாகவும் அட்லீக்கு பலரும் பாராட்டினை தெரிவித்தார்கள்.
மெகா ஹிட்: ஜவான் படத்தை ஷாருக்கானே தயாரித்திருந்தார். படம் வெளியாகி வட மாநிலங்களில் மெகா ஹிட்டானது. அதேசமயம் தமிழ்நாட்டில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக பிற படங்களிலிருந்து இதுவரை காப்பி அடித்த அவர்; ஜவான் படத்தை தனது படங்களிலிருந்தே காப்பி அடித்துவிட்டார் என்று ஓபனாகவே பலரும் விமர்சனத்தை முன்வைத்தார்கள். ஆனாலும் படம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. இதனால் அவர் பாலிவுட்டிலும் கவனிக்கப்படக்கூடிய இயக்குநராக மாறிவிட்டார் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
அடுத்த படமும்: பாலிவுட்டில் முதல் படத்திலேயே மெகா ஹிட்டை கொடுத்துவிட்டதால் ஷாருக்கானின் குட் புக்கிலும் அவரது பெயர் இடம்பெற்றுவிட்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி மற்ற நடிகர்களும் அட்லீயுடன் வேலை செய்வதற்கு விரும்புவதாகவும்; சல்மான் கான் - கமல் ஹாசனை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்றும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தையும் அவர் தயாரித்திருக்கிறார்.
டிஷர்ட்டின் விலை: அதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நாளை படம் வெளியாகவிருக்கிறது. அதனையொட்டி அட்லீ படத்தின் ப்ரோமோஷனில் படு தீவிரமாக இறங்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு ப்ரோமோஷனில் அணிந்திருந்த டிஷர்ட்டின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி கிவன்ஷ் என்ற பிராண்டை சேர்ந்த அந்த டிஷர்ட்டின் விலை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு டிஷர்ட்டின் விலை ஒரு லட்சமா என்று வாயை பிளந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











