பயில்வான் ரங்கநாதன் சாதாரண ஆள் இல்லை… புகார் கொடுக்க தயங்கும் நடிகர்கள் !
சென்னை : பயில்வான் ரங்கநாதன் மீது பல நடிகைகள் குற்றம்சாட்டி உள்ள போதும் ஒருவர் கூட அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.
பிரபல பத்திரிக்கையாளர், தமிழில் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட நடிகர் பற்றி பேசி பிரபலமானார்.
இதனால்,பல நடிகர், நடிகைகள் இவரை கண்டித்தும் தொடர்ந்து அப்படியே பேசிவருகிறார்.

பயில்வான் ரங்கநாதன்
நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கிட்டதட்ட 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார். நடிகைகளுக்கு சினிமாவில் எப்படி வாய்ப்பு கிடைத்தது, நடிகைகள் எப்படி பிரபலமானார்கள், சினிமா பிரபலங்களின் விவாகரத்து என சலக விஷயத்திலும் மூக்கை நுழைத்து, அவங்கள் குறித்து அசிங்கமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தொடர்ந்து அவதூறு பேச்சு
பயில்வான் ரங்கநாதன் மீது பாடகி சின்மயி, நடிகை கஸ்தூரி, நடிகை ஓவியா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர். நடிகை ராதிகா, விஜயகாந்த் குறித்து இவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், திருவான்மியூர் பீச்சில் பயில்வானை பார்த்த ராதிகா நடுரோட்டில் வைத்து திட்டி உள்ளார்.

போலீசில் புகார்
இதையடுத்து, நடிகர் பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்கள், பெண்கள் குறித்தும் அவதூறான கருத்துகளை இணையத்தில் பரப்பி வருவதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி திவ்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவதூறு செய்திகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாரும் முன்வரவில்லை
பிரபலமான நடிகர், நடிகைகள் அவரை கண்டித்தாலும் அவர் மீது ஒருத்தரும் வழக்கு போட முன்வரவில்லை இல்லை. அதே போல, தற்போது நடந்து முடிந்த நடிகர் சங்க நிர்வாகிகளிடமும் பயில்வான் ரங்கநாதனுக்கு முடிவு கட்டவேண்டும் என நடிகர்கள் கூறியதாக கூறப்பட்டது. ஆனால், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் யாரும் பயில்வான் குறித்து ஒருவார்த்தைக்கூட பேசவில்லை.

சாதாரண ஆள் இல்லை
பயில்வான் ரங்கநாதன் சாதாரண ஆள் இல்லை, அவர் மீது எந்த நடிகையோ அல்லது நடிகரோ வழக்கு தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட நடிகர் குறித்த ரகசியங்களை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்திவிடுவார் என்று பலரும் பயப்படுகிறார்களாம். இந்த பயம் காரணமாகத்தான் யாரும் அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











