ஜன நாயகன் லீக்: வெப்சைட்டுகள் முடக்கம்.. தமிழக சைபர் கிரைம் நடவடிக்கை!

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' சென்டார் வாரியத்திடம் சிக்கி பெரும் பிரச்சனையை சந்தித்தது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம், இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த சூழலில் ஜன நாயகன் படம் இணையதளத்தில் லீக்கானது. இந்நிலையில்,படத்தை லீக் செய்த வெப்சைட்டுகளை தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், மமிதா பைஜூ,கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் ஜன நாயகன். பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் அனுப்பியது. மறு தணிக்கை குழு மும்பையில் படத்தை பார்த்துவிட்டு சில மாற்றங்களை செய்யும்படி உத்தரவிட்டது.

Jana nayagan Vijay
Photo Credit:

ஜன நாயகன் லீக் : அந்த மாற்றத்துடன் படம் தேர்தல் முடிந்த பின் அடுத்த மாதம் வெளியிட படங்ககுழு திட்டமிட்டு இருந்த நிலையில், வியாழக்கிழமை (ஏப்ரல் 9ந் தேதி) படத்தின் 5 நிமிட காட்சி இணையத்தில் வெளியானது. அதைத்தொடர்ந்து மறுநாள் காலை டெலிகிராமில் அதிகாலை 3மணி அளவில் ஜன நாயகன் முழு படமும் வெளியாகி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் வன்மையாக கண்டித்தனர். இதையடுத்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவரும் இயக்குனருமான கேயாபர் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் ஜன நாயகன் படத்தை பல்லாயிரக்கணக்கானோர் டவுன்லோட் செய்து பார்த்துக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

நடவடிக்கை: காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து இணையதளம் உள்ளிட்ட எந்த சோசியல் மீடியாக்களிலும் படத்தை யாரும் பகிர்ந்து விடாதபடி தடுக்க வேண்டும் என்றும் இந்த படத்தை திருட்டுத்தனமாக வெளியிடுபவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார். இந்நிலையில், ஜனநாயகனை லீக் செய்த வெப்சைட்டுகளை தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். படத்தை பதிவிட்ட வெப்சைட்டுகள், டெலிகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், படத்தை பகிர்ந்த சமூக வலைதள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X