twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2009 முதல் 2014 திரைப்பட, சின்ன திரை விருதுகள்... சென்னையில் செப்.4ம் தேதி விருது வழங்கும் விழா

    |

    சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்ன திரை விருதுகள் விழா குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    2009 முதல் 2014 வரையிலான தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கும் திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    தமிழ்நாடு அரசின் இந்த விருதுகள் வழங்கும் விழா வரும் 4ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

    ஆதிபுருஷ் ஹீரோயின் உடன் காதலில் விழுந்தாரா பிரபாஸ்.. டேட்டிங் என டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்! ஆதிபுருஷ் ஹீரோயின் உடன் காதலில் விழுந்தாரா பிரபாஸ்.. டேட்டிங் என டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

    தமிழ்நாடு அரசின் விருது விழா

    தமிழ்நாடு அரசின் விருது விழா

    தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்ன திரை விருதுகள் வழங்கு விழா குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விழா வரும் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில், திரைப்பட விருதுகள், சின்ன திரை விருதுகள், எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    விருது விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு

    விருது விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு

    2009 முதல் 2014ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளனர். சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளருக்கு முதல் பரிசாக 2 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த படங்களுக்கான சிறப்புப் பரிசாக 23 தயாரிப்பாளர்களுக்கு தலா 75,000 ரூபாய் வீதம், மொத்தம் 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாம் வழங்கப்படவுள்ளது. அதேபோல், சிறந்த நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு, தலா 5 சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    சின்ன திரை கலைஞர்களுக்கு விருதுகள்

    சின்ன திரை கலைஞர்களுக்கு விருதுகள்

    இந்த விழாவில் திரைப்படங்களைத் தொடர்ந்து சின்ன திரை விருதுகள் வழங்கப்பட உள்ளன. 2009 முதல் 2013 வரை வெளியான சிறந்த மெகா சீரியல்களில் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசாக 2 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூயாய் என, 20 பேருக்கு மொத்தம் 25 லட்சம் வழங்கப்படுகிறது. அதேபோல், சிறந்த நாயகன், சிறந்த நாயகி, சிறந்த தொழில்நுட்ப பிரிவு கலைஞர்கள் என 80 பேருக்கு 3 சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.

    மாணவர்களுக்கான விருதுகள் அறிவிப்பு

    மாணவர்களுக்கான விருதுகள் அறிவிப்பு

    இந்த விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2008 - 2009 முதல் 2013 - 2013ம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்கள், அதில் பணியாற்றிய இயக்குநர் உள்ளிட்ட கலைஞர்கள் 30 பேருக்கு 30 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் அனைத்தும் வரும் 4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Tamil Nadu Government Film Awards and Television Awards ceremony will be held in Chennai on September 4th
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X