கங்குவா கலெக்ஷனை அள்ளுவது கன்பார்ம்.. சிறப்பு காட்சிக்கு அனுமதி.. மகிழ்ச்சியில் படக்குழு!

சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவம்பர் 14ந் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால்,ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நடிகர் சூர்யாவிற்கு சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களான இருந்தன. அந்த இரு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து எதிர்க்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றன. அந்த படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் ஐந்து நிமிடமே அந்த படத்தில் வந்தாலும், ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அதில் நடித்திருந்தார்

suriya kanguva special show

சூர்யாவின் கங்குவா: இந்த படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா, ஸ்டுடியோ க்ரீன் K.E. ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் சிவா இயக்கி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனித்து வருகிறார். . ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி உள்ள இப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தேதியில் வேட்டையன் படம் வெளியானதால் படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14ந் தேதிக்கு தள்ளிவைத்தது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி: இந்நிலையில், கங்குவா படத்துக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, 'கங்குவா' திரைப்படம் வெளியாகும் நாளான வரும் நவ.14ம் தேதியன்று, காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்,சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யா 45: தற்போது சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'சூர்யா 44' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக உள்ள "சூர்யா 45" என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும்,ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் "சிவப்பு மஞ்சள் பச்சை", "பிடி சார்" போன்ற படங்களில் நடித்த நடிகை காஷ்மிரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X