Jawan - ரசிகர்கள் செய்யும் அலப்பறை.. அதிருப்தியில் ஜவான் படக்குழு?.. பிரச்னை எப்படி எல்லாம் வருது
மும்பை: Jawan (ஜவான்) ரசிகர்கள் செய்யும் சில செயல்கள் காரணமாக ஜவான் படக்குழு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜவான் படத்தின் மூலம் அட்லீ ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். முதல் படத்திலேயே ஷாருக்கானை வைத்து இயக்குவதால் இந்தப் படத்தில் பந்தயம் அடித்து தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர காத்திருக்கிறார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

பிரமாண்ட ரிலீஸ்: படம் இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திரையரங்குகளில் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது. தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களில் காலை 6 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. இதனால் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டிருந்தன. பதான் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஷாருக் நடித்திருக்கும் படம் இது என்பதால் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு படை எடுத்திருக்கின்றனர்.
எப்படி இருக்கிறது படம்: படத்தில் ஷாருக்கான் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் கை தட்டி ஆர்ப்பரிக்கின்றனர். குறிப்பாக அட்லீயின் மேக்கிங் அருமையாக இருப்பதாகவும்; அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் என்ட்டெர்டெயினராக படம் வந்திருக்கிறது என்று படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் ஷாருக்கானை அட்லீ சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
பாசிட்டிவ் விமர்சனம்: படத்தின் ஒரு காட்சி முடிவடைந்திருக்கும் சூழலில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. இருந்தாலும் முதல் காட்சியை வைத்து வரும் விமர்சனத்தை நம்ப முடியாது. போகப்போகத்தான் உண்மையான ரிசல்ட் தெரிய வரும்.அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ரசிகர்கள் அலப்பறை: இந்நிலையில் ரசிகர்கள் செய்யும் ஒரு செயலால் படக்குழு அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது படம் பார்க்க சென்ற ரசிகர்கள் ஷாருக்கானின் ஓபனிங் பாடல் உள்ளிட்டவைகளை வீடியோக்களாக எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றிவருகின்றனர். பொதுவாக பாடலின் சில காட்சிகளை வீடியோ எடுப்பது இயல்பான ஒன்றுதான் என்றாலும் ஜவான் படத்தின் முக்கியமான காட்சிகளை அவர்கள் வீடியோவாக எடுத்து பதிவேற்றிவருகின்றனர்.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அடுத்தடுத்து வரும் ரசிகர்களிடம் குறைந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி இப்படியே பட காட்சிகளை வீடியோவாக எடுத்து போட்டால் முழு படத்தையும் சமூக வலைதளங்களிலேயே பார்த்துவிடலாமே எனவும் ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூற ஆரம்பித்திருக்கின்றனர். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் ஜவான் படக்குழு என்ன செய்வதென்று தெரியாமல் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











