AK ஒரு ரெட் டிராகன்... டேவிட் பில்லா ரெபரன்ஸ்.. குட் பேட் அக்லி பட கதை இதுதானா?

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் சற்று முன் வெளியானது. GBU படத்தின் டீசரில் பில்லா அஜித், அட்டகாசம் அஜித், மங்காத்தா என பல ரெபரன்ஸ்கள் இடம்பிடித்திருக்கின்றன. AK ரொம்ப பேட் ஆன நல்லவன் என்றும் அஜித் பேசும் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன.

கேஜிஎஃப் படத்தில் யாஷ்க்கு வரும் காட்சியை போன்றே பில்டப்புடன் தொடங்குகிறது GBU டீசர். ஏகே ஒரு ரெட் டிராகன், அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா, அவன் மூச்சுலயே முடிச்சுடுவான் என்று தெறிக்கிறது அந்த பில்டப்.

good bad ugly David billa AK

அதகளம்: பில்டப் வசனத்துக்கு இடையே அஜித்தின் அறிமுகம் அதகளமாக இருக்கிறது. அதில் இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், நாம எவ்ளோ 'குட் டா இருந்தாலும், இந்த உலகம் நம்மள 'பேட் ஆக்குது என்ற அஜித்தின் வாய்ஸும், அப்போது வருகின்ற அவரது வெவ்வேறு கெட்டப்களும் ஈர்க்கிறது. முழுக்க முழுக்க அஜித்தின் ஆக்‌ஷன்களும், எமோஷன்களையும் இந்த டீசர் வெளிப்படுத்துகிறது. குட் பேட் அக்லி கண்டிப்பாக அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனத் தெரிகிறது. அதற்கேற்றார் போல் பீப் சொல்லுக்குப் பிறகு காட்றேன் என டீசரில் முடிக்கிறார் அஜித்.

சம்பவம்: நாடி நரம்பு எல்லாம் ஒரு வெறி பிடித்த அஜித் ரசிகரால் மட்டுமே இப்படி ஒரு படத்தை இயக்க முடியும். ரஜினிக்கு எப்படி அனிருத், கார்த்திக் சுப்பராஜ் அமைந்தாரோ அதேபோன்று ஆதிக் ரவிச்சந்திரன் சும்மா இறங்கி சம்பவம் செய்துள்ளார். குறிப்பாக, அஜித் ரசிகர்கள் கொண்டாடிய கதாப்பாத்திரங்களின் சாயலை டீசரில் கொண்டு வந்து பிரம்மாண்டம் காட்டியுள்ளார். ரெட், பில்லா, வாலி, அமர்க்களம், வேதாளம், அட்டகாசம் என டீசரில் முழுக்க முழுக்க அஜித்தே நிரம்பி வழிகிறார்.

good bad ugly David billa AK

கொலை மாஸ்: ஆக்சன், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை என டீசர் கொலை மாஸாக இருப்பதாகவும், GBU படத்தில் 10 சம்பவம் இருப்பதாக ரசிகர்கள் டீகோட் செய்து கதை குறித்து விவாதிக்க தொடங்கியுள்ளனர். இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி படத்தின் டீசரை கட் செய்துள்ளதாக ரசிகர்களை அலசி ஆராய்ந்து தெரிவிக்கின்றனர். அஜித் நடித்த வலிமை, துணிவு ஆகிய படங்களுக்கு இவரே எடிட் செய்துள்ளார். அதேபோன்று ஆதிக் ரவிசந்திரனின் 'மார்க் ஆண்டனி' படத்தை எடிட் செய்ததும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டார்க் ஷேட்: ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படங்களில் வழக்கமாக வரும் டீசர், டிரைலரை போன்று கலர் பல்பு, ஸ்டார், பில்டப், யாரும் கிட்ட நெருங்க முடியாத கேங்ஸ்டர் என விறுவிறுப்பை கூட்டியுள்ளார். அஜித் ரசிகர்களுக்கு இது புதிதுதான். வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் டார்க் ஷேட் கேங்ஸ்டராக இப்படத்தில் களமிறங்கியுள்ளார். படத்தின் டீசரை வைத்தே படத்தின் கதை இதுதான் என பலரும் திரி வைத்து கொழுத்த தொடங்கியுள்ளனர்.

good bad ugly David billa AK

படத்தின் கதை: இளமை காலத்தில் கேங்ஸ்டராக இருந்து ஜெயிலுக்கு செல்லும் அஜித், பின்பு ரொம்ப ரொம்ப பேட் பாயாக வந்து வில்லன்களை பழிவாங்குவது தான் கதையாக இருக்கும் என கூறி வருகின்றனர். படத்தின் டீசரில் படத்தில் அஜித்தின் பெயர் AK என்பதையும் டீசரில் பதிவு செய்துள்ளனர். அஜித்தை தாண்டி படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் யாரும் இடம்பெறவில்லை. பிரசன்னா, சுனில் ஆகிய இருவர் மட்டுமே ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர். இளமை காலத்தில் இருக்கும் அஜித் பில்லா ரெபரன்ஸ் பார்க்கும்போது அந்த கெட்டப் டேவிட் பில்லாவை குறிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X