Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொஞ்சம் ஆசை, கொஞ்சம் உணவு, கொஞ்சம் பேச்சு... இதை பண்ணினா 70 வயசுலயும் எனர்ஜி... ரஜினி தகவல்
ஐதராபாத்: தமிழ் ரசிகர்களை போலவே தெலுங்கு ரசிகர்களும் என் மீது அதிக அன்பு செலுத்துவது என் பூர்வஜென்ம புண்ணியம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம், தர்பார். இதில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மற்றும் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ்
அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. வரும் 9 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. படம்பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, இது மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்றார்.
ஐதராபாத்தில்
இந்நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், தெலுங்கில் வெளியிடும் என்.வி.பிரசாத், இயக்குனர் முருகதாஸ் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது:
தெலுங்கு ரசிகர்கள்
தமிழ் ரசிகர்களை போலவே தெலுங்கு ரசிகர்களும் என் மீது அதிக அன்பு செலுத்துவது என் பூர்வஜென்ம புண்ணியம். 1976 ஆம் ஆண்டு தெலுங்கில் நான் நடித்த முதல் படம் அந்துலேனி கதா வெளியானது. இப்போது இங்கு கூடியிருப்பவர்களில் 99 சதவிகித பேர் அப்போது பிறந்திருக்கவே மாட்டீர்கள். பிறகு பெத்தராயுடு போன்ற படங்களில் நடித்தேன்.
நன்றாக ஓடின
நான் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் நன்றாக ஓடின. அதற்கு நான் நடித்தது மற்றும் காரணமல்லை. படம் பண்ணும்போதே சில மேஜிக்குகள் நடக்க வேண்டும். ஆனால், அது நம் கையில் இல்லை. முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பல வருடங்களாக நினைத்தேன். அது இப்போது இந்தப் படம் மூலமாக நிறைவேறியிருக்கிறது.
சில ஆலோசனை
70 வயதிலும் ஹீரோவாக நடிக்கிறீர்களே, எப்படி என்று கேட்கிறார்கள். இவ்வளவு எனர்ஜியுடன் இருக்க சில ஆலோசனைகள் சொல்கிறேன். ஆசையை குறையுங்கள். கவலையை குறையுங்கள். குறைவான உணவு எடுத்துக்கொள்ளுங்கள். குறைவாக தூங்குங்கள், குறைவாகப் பேசுங்கள். இதை கடைப்பிடித்தால் எனர்ஜி கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.