twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆன்ஸ்க்ரீன்.. ஆஃப்ஸ்க்ரீன்.. இரண்டிலுமே கமல் ஒரு தசாவதாரம் தான்!

    |

    Recommended Video

    Kamal Hassan Success Secrets: எதிர்காலத்தை கணித்த கமல் படங்கள்

    சென்னை: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து கமல் அசத்தியிருந்தார். இந்திய சினிமாவில் அதற்கு முன், நடிகர் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நவராத்திரி படத்தில் நடித்த சாதனையை கமல் முறியடித்தார்.

    கமல்ஹாசன் பிறந்து, 65 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால், 60 ஆண்டுகள் திரை வாழ்வை நிறைவு செய்த மகத்தான கலைஞன் என்ற சாதனையை கமலை தவிர உலகில் எந்த நடிகரும் செய்திருக்க வாய்ப்பில்லை.

    ஆன்ஸ்க்ரீனில் மட்டுமின்றி ஆஃப்ஸ்க்ரீனில் தசாவதாரத்தை நிகழ்த்தி காட்டிய கமல்ஹாசன் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்.

    நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. ரசணை மிகுந்த ரகசிய கவிஞன்.. உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு!நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. ரசணை மிகுந்த ரகசிய கவிஞன்.. உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு!

    பிறவி நடிகன்

    பிறவி நடிகன்

    1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்தபோது, பரமக்குடி வாசிகளுக்கு தெரியாது, தமிழ் சினிமாவின் மணிமகுடமாக அந்த குழந்தை மாறப்போகிறது என்று. 1960ம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மாவில், நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான ஜனாதிபதி விருதினை பெற்று, தான் ஒரு பிறவி நடிகன் என கமல் நிரூபித்துவிட்டார்.

    களத்தூர் கண்ணம்மாவில் நடிகை சாவித்ரி டீச்சர் வேடத்தில் நடித்து இருப்பார். ஒரு காட்சியில், கமல்ஹாசனை பிரம்பால் அடிக்கும் காட்சி வரும். ஆனால், அந்த காட்சியில், சாவித்ரி கமலை உண்மையில் பிரம்பால் அடிக்கவில்லை. ஆனால், பிரம்பால் அடிபட்டது போலவே 6 வயதில் நடித்து அசத்தியவர் கமல்.

    கதாசிரியர்

    கதாசிரியர்

    நடிப்பையும் தாண்டி கமல் ஒரு நல்ல கதாசிரியர். இந்தியளவில் கமலுக்கு அங்கீகாரம் பெற்று தந்த குருதிப்புனல், மகாநதி, ஹேராம், தசாவதாரம் மற்றும் விஸ்வரூபம் போன்ற மெகா ஹிட் படங்களின் கதைகளை எழுதியது கமல்ஹாசன் தான். தனக்கான டபுள் ஆக்‌ஷன் கதைகளை எழுதுவதிலும் கமல்ஹாசன் சண்டியர் தான்.

    குறிப்பாக, 2008ம் ஆண்டு வெளிவந்த தசாவதாரம் படத்தில் 10 கதாபாத்திரங்களில் கமல் நடித்திருப்பார். 10 கதாபாத்திரத்திற்கு அவரே விதவிதமான வாய்ஸ் மாடுலேஷனில் டப்பிங் பேசி அசத்தியிருப்பார். மேலும், பட்டர்ஃபிளை எஃபெக்ட், கேயாஸ் தியரி என சூட்சம விஷயங்களையும் தனது திரைக்கதையில் கையாண்டு இருப்பார்.

    நகைச்சுவை மன்னன்

    நகைச்சுவை மன்னன்

    நகைச்சுவை மன்னன்

    மாஸ் நடிகர் என்ற அந்தஸ்த்தை அடையாமல் நடிகர் கமல் நம்மவராக மாறியதற்கு அவரது நகைச்சுவை திறனும் ஒரு காரணம். கிரேஸி மோகனுடன் கமல் இணைந்த படங்களில் எல்லாம் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. இன்றும் டிவியில் அந்த படங்களை பார்த்தால், வாய் விட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

    சதி லீலாவதி, மைக்கேல் மதன காம ராஜன், பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், மும்பை எக்ஸ்பிரஸ் என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    பாடகர்

    பாடகர்

    கவிதை எழுதுவதில் எந்த அளவுக்கு கமல் கெட்டிக்காரரோ, அந்த அளவுக்கு பாடுவதிலும் கில்லாடி தான். 1978ம் ஆண்டு வெளியான சிவப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் பாடிய ‘நினைவோ ஒரு பறவை' பாடல் எவர்க்ரீன் பாடல் லிஸ்டில் என்றுமே இருக்கும்.

    படங்களில் நாயகர்கள் பாட்டு பாடலாம் என்ற பாகவதர் காலத்து டிரெண்டை மீண்டும் கொண்டு வந்தவர் கமல்ஹாசன் தான். இவரை தொடர்ந்து, ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல நடிகர்கள் தங்கள் படங்களில் பாடி வருகின்றனர்.

    நினைவோ ஒரு பறவை, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், ருக்கு ருக்கு ருக்கு என தொடங்கி விஸ்வரூபம் வரை பல பாடல்களை பாடி பாடலிலும் தான் ஒரு சகலகலா வல்லன் என நிரூபித்துள்ளார்.

    டான்ஸ் மாஸ்டர்

    டான்ஸ் மாஸ்டர்

    எந்த கலையும் கமல்ஹாசனுக்கு கை வந்த கலை மட்டுமல்ல, கால் வந்த கலையும் கூடத்தான். நடனமாடுவதில் வல்லவரான கமல்ஹாசன், பல படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

    விஸ்வரூபம் படத்தில் வரும் 'உனை காணாத' பாடலில் கதக் டான்ஸ் ஆடி கலக்கியிருப்பார். எந்த ஒரு நடனத்தை ஆட வேண்டும் என்றாலும், முறைப்படி அதனை பயின்று நடனமாடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் கமல்.

    மகா நடிகன்

    மகா நடிகன்

    மகா நடிகன், உலக நாயகன் என்ற பெயர்கள் கமலுக்கு மிகவும் பொருந்தும். ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால், அந்த கதாபாத்திரமாகவே கமல் மாறி நடிப்பார் என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. மகாநதி, இந்தியன், தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி, குருதிப்புனல், ஹேராம், அன்பே சிவம், தசாவதாரம், விஸ்வரூபம் என கமல் நடித்த அத்தனை படங்களின் பெயர் பட்டியலையும் இங்கே போடலாம்.

    அரசியல்வாதி

    அரசியல்வாதி

    சினிமா துறையில் உள்ள பல துறைகளில் புகுந்து பல சாதனைகளை புரிந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கி அரசியலிலும் அடியெடுத்து வைத்து விட்டார். வரும் சட்டமன்ற தேர்தலில், நடிகர் கமல் களம் காணவுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. சினிமாவில் கிடைத்த வெற்றி, அரசியலிலும் கமலுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    பிக்பாஸ்

    பிக்பாஸ்

    வெள்ளித்திரை மட்டுமல்ல, சின்னத்திரையில் தான் ஒரு பிக்பாஸ் என்பதை, கடந்த மூன்றாண்டுகளாக தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நிரூபித்துள்ளார். குழந்தை நட்சத்திரம், நடிகர், கவிஞர், பாடகர், நடன ஆசிரியர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட ஒரு தமிழன் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதில் பெருமை கொள்வோம். மக்களுக்காக ஏதாவது செய்யணும்னு இருக்க அந்த மனசு போதும் கமல் 100ஐ தொடுவார்!

    English summary
    Here then, are 10 of his off-screen Avatars, that deserve more attention, and definitely a closer look. Of course, there are also some spectacular idiosyncrasies that are worth mentioning, and giggling about!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X