twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நஷ்டத்தில் முடங்கிய தியேட்டர்கள்.. ஒட்டுமொத்தமாக மூடிவிட்டால் ... ரசிகனின் ரசனை மாறிவிடுமா?

    |

    சென்னை : ஆன்லைன் மற்றும் ஓடிடி ப்ளாட்பாம் கடும் சவாலை கொடுக்கும் இந்த தருணத்தில் லாக் டவுன் பிரச்சனைகள் விஸ்வரூபமாக உள்ளது. மல்டிபிளெக்ஸ் திரை அரங்கம் பாதுகாப்பாக உள்ளது ஆனால் தனியாக இருக்கும் திரை அரங்கங்கள் மிகுந்த ஆபத்தில் இருப்பதாக உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.

    ஏ.வி.எம். ராஜேஸ்வரி மற்றும் மஹாராணி ஆகிய திரையரங்கங்கள் நிரந்தரமாக மூடப்படப் போவதாகத் தகவல் வந்திருக்கின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர் திறக்கப்பட வில்லை, சம்பளம் கொடுக்க முடியவில்லை என்பது பெரிய காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

    ஒவ்வொரு தியேட்டரிலும் ஆப்பரேட்டர்கள், காவலாளி, வாகன டோக்கன் ஆள், கேண்ட்டீன் ஆட்கள், பராமரிப்பு ஆட்கள் என்று 10 அல்லது 15 பேர்வரைதான் இருக்க வாய்ப்புண்டு. பல தியேட்டர்களில் கேண்ட்டீன் என்பது காண்ட்ராக்ட்டில் இயங்குகிறது. எனவே அவர்களுக்கான சம்பளப் பிரச்சனையும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இல்லை.

    ஒரு வேளை இவரே நடிக்கப் போறாரோ.. பாக்ஸர் லுக்கில் மாஸ் காட்டும் பா. ரஞ்சித்.. வைரலாகும் போட்டோ!ஒரு வேளை இவரே நடிக்கப் போறாரோ.. பாக்ஸர் லுக்கில் மாஸ் காட்டும் பா. ரஞ்சித்.. வைரலாகும் போட்டோ!

    கழுத்தில் கத்தி

    கழுத்தில் கத்தி

    வாடகை ஒரு பெரிய காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று சிலர் சொன்னாலும் உலகமே முடங்கிக் கிடக்கும்போது யாரும் வாடகை கேட்டுக் கழுத்தில் கத்தி வைப்பதில்லை. பிறகு நல்ல கூட்டம் வரும் தியேட்டர்களை மூட முடிவு செய்ததற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும் என்று பலரும் யோசித்து வரும் நிலையில் வருடாந்திர வரவு செலவுக் கணக்கில் ஏற்படும் நஷ்டம் தான் மிகப் பெரிய காரணம் என பலரும் சொல்லி வருகிறார்கள்.

    ஏ.வி.எம் தியேட்டர்

    ஏ.வி.எம் தியேட்டர்

    ஏ.வி.எம்.ராஜேஸ்வரி உரிமையாளர் பல வருடங்களாக லட்சங்களில் கைக்காசு போட்டு நடத்திக்கொண்டிந்ததாகக் கேள்வி. ஆசையுடன் அதனை ஆரம்பித்தவரின் நினைவாக நஷ்டமானாலும் பரவாயில்லை என்ற கொள்கையில் பல ஆண்டுகளாக தேசிய கீதம் திரையில் காண்பித்து அனைவரையும் எழுந்து நிற்க வைத்த பண்பாடு என பல வரலாறு உண்டு . இப்போது தாக்குப் பிடிக்க முடியவில்லை என பல விதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. ஏ.வி.எம் ஸ்டூடியோ நிலத்தில் பாதி பங்கு ஏற்கனவே அபார்ட்மெண்ட்ஸாக மாறி இருப்பது பலருக்கும் தெரிந்த கசப்பான உண்மை.

    மஹாராணி

    மஹாராணி

    மஹாராணி தியேட்டர் உரிமையாளருக்கு வயதாகி விட்டது. தன் இறுதிக் காலம்வரை நடத்த வேண்டும் என்ற முனைப்புக் காட்டினார். ஆனால், கடந்த வருட கணக்குப்படி அவருடைய நஷ்டம் சுமார் 45 லட்சம் என்றும் இதனால் மன அழுத்தம் தான் அதிகம் என்று எல்லோரும் பேசி வருகின்றனர். நஷ்டத்தின் பிரமாண்டம் கண்ணைக் கட்டி இழுக்க, நிரந்தரமாக மூடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் சொல்லுகின்றன.

    பெரிய நஷ்டம்

    பெரிய நஷ்டம்

    விரைவில் இவர்களை முன் மாதிரியாகக் கொண்டு மேலும் பல சிங்கிள் தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் உண்டு. படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் பெருமளவில் நஷ்டப்படுகிறார்கள்.
    சிங்கிள் தியேட்டர்களை நடத்தும் உரிமையாளர்கள் அல்லது லீஸ் எடுத்து நடத்துபவர்கள் பாதிக்குமேல் நஷ்டப்படுகிறார்கள்.

    வட்டி

    வட்டி

    எல்லா விநியோகஸ்தர்களும் லாபத்தில் இயங்குகிறார்களா என்பது கேள்விக்குறி சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்பவர்கள் பல நேரம் வட்டியையும், சில நேரம் கொஞ்சம் அசலையும் விட்டுக் கொடுத்துத் தொழில் செய்யும் செய்திகளையும் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். படங்களின் தயாரிப்புக்குச் செய்யப்படும் செலவு காசும், விற்பனை மூலம் வரும் காசும் எங்கு செல்கின்றன என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

    தியேட்டர் உரிமையாளர்கள்

    தியேட்டர் உரிமையாளர்கள்

    வரும் காலத்தில் மேலும் பல மினி தியேட்டர்கள் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, தயாரிப்பாளர்கள், திரையரங்கத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து விபரங்களைத் திறந்த மனதுடன் கேட்டு, விவாதிக்க வேண்டும். சுமூகமான வியாபார நிலையை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்று பல தியேட்டர் உரிமையாளர்கள் போராடி வருகிறார்கள். ஆன்லைன் மற்றும் ஓடிடி ப்ளாட்பாம் மூலம் வரும் படங்கள் கடும் போட்டியை தரும் நிலையில் மக்கள் ரசனை மட்டுமே கடைசி தீர்வாக உள்ளது.

    English summary
    The theater owners have suffered huge losses due to the closure of the theater
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X