வெறிச்சோடிய தியேட்டர்கள்.. ரசிகர்களும் இல்லை.. படங்களும் இல்லை.. வேதனையில் உரிமையாளர்கள் !

சென்னை : வெறிச்சோடிய திரையரங்குகளைப் பார்த்து வேதனையில் மூழ்கியுள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பிடித்தமான இடங்களான மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மார்ச் மாதம் முதல் ஆரம்பமான இந்த ஊரடங்கு இன்று வரை அமலில் உள்ளது. ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்லமுடியாமல் மக்கள் கவலையில் உள்ளனர்.

 The theater owners have suffered huge losses dur to the closure of the theater

இந்த நேரத்தில் பீச், ஹோட்டல்ஸ், சுற்றுலாத்தளம் போன்ற பல அம்சங்களை மக்கள் இழந்துள்ளனர் எனினும் பலராலும் ஏற்றுகொள்ள முடியாத இழப்பு என்றால் அது சினிமா தியேட்டர்கள்தான். வாராவாரம் கண்டிபாக கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்பதை விட கட்டாயம் ஒரு சினிமாவுக்கு போய்விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே அதிகம். அதிலும் சினிமா ரசிகர்கள் இந்த டால்பி ஆட்டம்ஸ், 3டி, பெரிய ஸ்க்ரீன் போன்றவற்றை பார்க்கமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

 The theater owners have suffered huge losses dur to the closure of the theater

என்னதான் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்கள் இருந்தாலும் தியேட்டர்களில் போய்ப்பார்க்கும் அனுபவம் கிட்டாது என்பது உண்மை. முதல் நாள் முதல் காட்சி, கூட்ட நெரிசலில் டிக்கெட் வாங்குவது, இடைவேளையில் பாப் கார்ன் சாப்பிடுவது போன்ற அனுபவங்களை பெற இயலாமல் பலரும் உள்ளனர். சுமாரான படங்களை கூட தியேட்டர்களில் பார்க்கும்போது சூப்பராகவே இருக்கும்.

 The theater owners have suffered huge losses dur to the closure of the theater

அதிலும் நமக்கு பிடித்தமான நடிகர்களின் படம் வந்தால் பலமுறை சென்று பார்ப்போம். இப்படி பல சந்தோஷமான அம்சங்கள் திரையரங்குகளில் கிட்டும். துன்பமான தருணங்களில் கூட தியேட்டருக்கு சென்று படம் பார்த்து மனதை தேற்றுபவர்களும் உள்ளனர்.

 The theater owners have suffered huge losses dur to the closure of the theater

ஆனால் இப்போதோ அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் மக்களுக்குப் பிடித்தமான தியேட்டர்கள் உண்டு. நெல்லை முத்துராம் சினிமாஸ், சென்னை குரோம்பேட்டை வெற்றி- உதயம் போன்ற ரசிகர்களின் பிரியமான திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. சென்னை மதுரை, கோவை, திருச்சி , தஞ்சை போன்ற பெரு நகரங்களில் உள்ள அனைத்து பெரிய தியேட்டர்களும் மாஸ் ஹீரோக்களின் படங்களை ரீலீஸ் செய்து பழக்கபட்டவர்கள் இன்று வெறிச்சோடிய திரையரங்கை பார்த்து வேதனை அடைந்து வருகின்றனர்.

 The theater owners have suffered huge losses dur to the closure of the theater

அந்த தியேட்டர்களின் ஓனர்களுக்கு ட்விட்டரில் ரசிகர்கள் ஆறுதல் சொல்லி வருகின்றனர். தற்போது வெற்றி சினிமாஸின் ஓனர் ராகேஷ் கௌதமன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளர். அதில் அவர் தனியாக அமர்ந்து தளபதி விஜயின் சர்கார் பட பாடலை போட்டு சௌன்ட், ஏஸி போன்றவற்றை சரிபார்த்துக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் யாருமே இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்துற என்று கலாய்த்து உள்ளனர். மேலும், பலர் எப்படி இருந்த தியேட்டர் இப்படி ஆயிடுச்சே என கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X