அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த வெங்கட்பிரபு..விரைவில் சென்னை 600028 பார்ட் 3.. குஷியில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் வெங்கட்பிரபு. இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான இவர், சென்னை 600028 என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இசைஞானி இளையராஜாவின், சகோதரனான கங்கை அமரன் கரகாட்டக்காரன் என்ற வெற்றிப்படத்தை எடுத்தார். இந்த படம் தியேட்டரில் ஓராண்டுக்கு மேலாக ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து பல படத்தை இயக்கினார். இவரின் மூத்த மகனான வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் சில படங்களில் நடித்து வத்த நிலையில். இயக்குனராக களமிறங்கி சென்னை 600028 என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை எஸ்.பி.பி சரண் தயாரித்திருந்தார்.

வெங்கட் பிரபு: 2007-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மிர்ச்சி சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலஷ்மி , கிறிஸ்டியன் செடெக், இளவரசு, சம்பத் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு. யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் சேர்ந்து இசையமைத்து இருந்தனர்.கலப்பான நகைச்சுவை திரைப்படமான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது.
அடுத்தடுத்த வெற்றிப்படம்: அந்த படத்தின் மூலம் தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட வெங்கட்பிரபு 2011 ஆம் ஆண்டு, ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான மங்காத்தாவை இயக்கியுள்ளார், இதில் அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, வைபவ் ஆகியோர் நடித்திருந்தனர். அஜித்தின் 50வது படமான இப்படம், மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. இதைத் தொடர்ந்து பிரியாணி, மாஸ், சென்னை 28 இரண்டாம் பாகம், மாநாடு என அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கட்பிரபு தளபதியை வைத்து கோட் படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
சென்னை 29 பார்ட் 3: இந்த படத்தை தொடர்ந்து, சென்னை 600028 திரைப்படத்தின் 3-ஆம் பாகத்தை எடுக்கும் முடிவில் வெங்கட் பிரபு இறங்கி உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து, எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை. ஒருவேளை மூன்றாம் பாகம் உருவாகும் பட்சத்தில், முதல் பாகத்தில் நடித்த பிரபலங்களை வைத்தே இந்த பாகம் எடுக்கப்படுமா? அல்லது புதிய நடிகைகளை வைத்து இன்றைய டிரெண்டுக்கு ஏற்றபடி ஒரு கதையை இயக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











