ஜார்ஜ் குட்டி ரிட்டர்ன்ஸ்… திரிஷ்யம் 3ம் பாகத்துக்கு ரெடியான மோகன்லால்: அடிபொலி அப்டேட் இது!

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம் படம் இரண்டு பாகங்களாக வெளியாகியிருந்தது.

ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

மாஸ் ப்ளாக் பஸ்டர்

மாஸ் ப்ளாக் பஸ்டர்

மலையாளத்தின் சூப்பர் ஸ்டாராக கலக்கிவரும் மோகன்லால், தமிழிலும் 'இருவர்', விஜய்யுடன் 'ஜில்லா' போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் 2013ல் வெளியான 'திரிஷ்யம்' படம், அவருக்கு மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை இயக்கியிருந்தார், மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.

க்ரைம் திரில்லர் மேஜிக்

க்ரைம் திரில்லர் மேஜிக்

தனது மகளை ஆபாசமாக போட்டோ எடுத்து மிரட்டும் இளைஞனை, மீனா எதிர்பாராதவிதமாக கொலை செய்துவிடுவார். இந்த கொலையை மறைத்து தனது குடும்பத்தை மோகன்லால் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான், படத்தின் ஒன்லைன். அதுவும் இறந்துபோனது போலீஸ் ஆபிஸரின் மகன். இப்படியொரு கதையை பக்கா க்ரைம் திரில்லராக இயக்கியிருப்பார் ஜீத்து ஜோசப்.

பல மொழிகளில் ரீமேக்

பல மொழிகளில் ரீமேக்

மலையாளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க 'பாபநாசம்' என்ற டைட்டிலில் வெளியானது. அதேபோல், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் திரிஷ்யம் படம் ரீமேக் செய்யப்பட்டது அப்படி ரீமேக் செய்யப்பட்ட எல்லா மொழிகளிலும், வசூலில் புதிய சாதனை படைத்தது திரிஷ்யம்.

இரண்டாவது பாகமும் சூப்பர் ஹிட்

இரண்டாவது பாகமும் சூப்பர் ஹிட்

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவானது. இதன் முதல் பாகத்தில் நடித்த அதே கூட்டணியில் வெளியானது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2021ல் கொரோனா காரணமாக நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியான 'திரிஷ்யம்' இரண்டாம் பாகமும் அசத்தல் ஹிட் கொடுத்தது. இதனால், மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி மீண்டும் '12த் மேன்' என்ற படத்தில் இணைந்தனர்.

திரிஷ்யம் 3ம் பாகம்

திரிஷ்யம் 3ம் பாகம்

திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் சிறப்பான வரவேற்பை பெற்றதால், அதன் 3ம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது 3ம் பாகம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதிலும். மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியே தொடரும் என சொல்லப்படுகிறது. மேலும், விரைவில் சூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், அதுகுறித்து சீக்கிரமே அபிஸியல் அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X