Jailer - ஜெயிலர் டிக்கெட் புக்கிங்.. மாஸ் காட்டும் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடர்பான தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ஜெயிலர். தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலி கொஞ்சம் ஆட்டம் கண்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்றும் வியாபாரத்திலும், சம்பளத்திலும் இப்போதைக்கு அவர்தான் நம்பர் 1 என்றும் பலர் ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

 The ticket booking of Jailer has come out and Rajinikanth fans are excited

முக்கியத்துவம் வாய்ந்த ஜெயிலர்: இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படம் ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுத்து தான் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்பதை ஆணித்தரமாக உணர்த்தி தலைவர் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஆடியோ வெளியீட்டு விழா: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலைமையில் ரஜினியின் பேச்சு என்னவாக இருக்கும் என்பதை கேட்க ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். அவர்களது ஆவலை பொய்யாக்காத வகையில்தான் ரஜினியின் பேச்சும் அமைந்திருந்தது. அந்த விழாவில் பேசிய ரஜினி, காக்கா, கழுகு கதையை சொன்னார். மேலும் சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று பல வருடங்கள் முன்னரே சொன்னதாகவும் தெரிவித்தார்.

பத்த வைச்சிட்டியே பரட்ட: ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் ரஜினியின் பேச்சை கேட்ட பலரும் காக்கா என்று விஜய்யைத்தான் ரஜினி சொல்கிறார். ஏற்கனவே புகைந்து கொண்டிருந்ததில் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்துவிட்டார் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர். அதேபோல் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிக்கு விஜய் குட்டி கதை மூலம் பதிலடி கொடுப்பார் என்றும் விஜய் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

மாஸ் காட்டும் ரஜினி: இப்படி ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் ஒருபக்கம் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்க மறுபக்கம் ஜெயிலர் சத்தமே இல்லாமல் மாஸ் காட்டிவருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜெயிலர் படத்தை அமெரிக்காவில் மொத்தம் 75 இடங்களில் 136 காட்சிகள் ஜெயிலர் திரையிடப்படவிருக்கிறதாம். அதனையொட்டி டிக்கெட் புக்கிங்கும் தொடங்கிவிட்டதாம்.

இதுவரை அங்கு 70,000 அமெரிக்க டாலர்களுக்கு 3,109 டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பதாகவும் அதன் இந்திய மதிப்பு 57 லட்சம் ரூபாய் எனவும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரிலீஸின் பத்து நாட்களுக்கு முன்னதாகவே அமெரிக்காவில் இப்படி என்றால் இந்தியாவில் நினைத்து பாருங்கள்.நிச்சயம் ஜெயிலர் பெரும் சாதனை படைக்கத்தான் போகிறது என ரஜினி ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X