எங்களுக்கு இன்னும் ஹனிமூனே முடியலை அதுக்குள்ள குழந்தையா - நிக் ஜோன்ஸ்

மும்பை: திருமணமாகி ஒரு வருடம் முடிந்து விட்டது குழந்தை பெற்று கொண்டு குடும்பத்தை தொடங்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று பிரியங்கா சோப்ரா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். பிரியங்காவின் குழந்தை பெற்று கொள்ளும் ஆசை பற்றி கூறியுள்ள அவரது கணவர் நிக் நாங்கள் தேன்நிலவு காலத்தில் இருக்கிறோம். ஜோனாஸ் பிரதர்ஸ் ரீயூனியன் டூர் முடிவடைந்த பிறகு அதற்கு முயற்சிக்கத் தொடங்கலாம் என்கிறார். என் குடும்பம் உருவாகும் போது ஒரு தந்தையாக நான் என் மனைவியோடு நூறு சதவீதம் இருக்கு விரும்புகிறேன். இன்னும் சில மாதங்களில் அது நிகழலாம் என்று கூறியுள்ளார்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியுமான பிரியங்கா சோப்ரா அமெரிக்காவின் பாப் பாடகரான நிக் ஜோனாஸ்சை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 36 வயதான பிரியங்கா சோப்ரா 26 வயதான நிக் ஜோன்ஸ் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.

The time has come to have a baby - Priyanka Chopra

திருமணமாகி ஒரு வருட காலம் முடிவடைய இருக்கும் இந்த வேலையில் இவர்கள் இருவரும் குழந்தை பெற்று கொண்டு குடும்பத்தை தொடங்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று பிரியங்கா சோப்ரா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் ஆசை இதுவானால் நிக்கின் எண்ணமும் அதுதானே என்பது சற்று குழப்பமாகவே உள்ளது.

பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வோக் இந்தியா கவர் ஸ்டோரிக்காக அளித்த பேட்டியில், தன்னுடைய விருப்ப பட்டியலில் குழந்தை பெற்றுக்கொள்ள போவதை தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சரியான நேரம் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். என் குழந்தை என்னை பெருமையுடன் இது என்னுடைய அம்மா என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

The time has come to have a baby - Priyanka Chopra

பிரியங்கா யுனிசெஃப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக விளங்குவதால் பல நன்கொடைகள் வழங்கியுள்ளார். தன்னார்வத் தொண்டுகள் பல செய்துள்ளார். அதனால் அவரது குழந்தைகள் வருங்காலத்தில் பெருமிதத்துடன் இருப்பார்கள் என்பது நிச்சயம்.

பிரியங்காவின் குழந்தை பெற்று கொள்ளும் ஆசை பற்றி நிக் கூறும்பொழுது, குடும்பத்தை தொடங்குவதற்கு முன்னர் சிறுது காலம் காத்திருக்க விரும்புவதாக தெரிவித்தார். இப்பொழுது நங்கள் தேன்நிலவு காலத்தில் இருக்கிறோம். ஜோனாஸ் பிரதர்ஸ் ரீயூனியன் டூர் முடிவடைந்த பிறகு அதற்கு முயற்சிக்க தொடங்கலாம் என்றுள்ளார்.

ஏனெனில் அவர் சுற்றுப்பயணத்தின் போது பிரியங்காவை முழுமையாக கவனித்து கொள்ள முடியாது. என் குடும்பம் உருவாகும் போது ஒரு தந்தையாக நான் என் மனைவியோடு நூறு சதவீதம் இருக்கு விரும்புகிறேன். இன்னும் சில மாதங்களில் அது நிகழலாம் என்று தெரிகிறது. நிச்சயம் பிரியங்கா சோப்ராவின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் என்று நாம் நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X