வெப் தொடரில் அறிமுகமாகும் நடிகர் சரத்குமார்... டைட்டில் என்ன தெரியுமா!

சென்னை : நடிகர் சரத்குமார் இப்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர், தயாரிப்பாளர் ,இயக்குனர், பாடகர் என பல முகங்களை கொண்டுள்ள சரத்குமார் இப்பொழுது வெப் தொடரிலும் அறிமுகமாக உள்ளார்.

ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த வெப் சீரிஸை நடிகை ராதிகா சரத்குமார் தயாரிக்க படப்பிடிப்பு தடபுடலாக தொடங்கியுள்ளது கூடவே டைட்டில் அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

அறிமுகமாக உள்ளார்

அறிமுகமாக உள்ளார்

முன்னணி நடிகர்கள் பலரும் இப்பொழுது வெப்சீரிஸ் மற்றும் ஆந்தாலஜி படங்கள் என ஓடிடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழில் முன்னணி நடிகராக உள்ள சரத்குமார் முதல் முறையாக வெப்தொடரில் நடித்து அறிமுகமாக உள்ளார். வானம் கொட்டட்டும் வெற்றிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற சரித்திர படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்து வருகிறார்.

த்ரில்லர் கதை களத்தில்

த்ரில்லர் கதை களத்தில்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெப்தொடர் ஒன்றில் சரத்குமார் நடிக்க இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

ராஜேஷ் எம் செல்வா

ராஜேஷ் எம் செல்வா

அதன்படி இப்பொழுது நடிகை ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா தயாரிப்பில் த்ரில்லர் கதை களத்தில் அட்டகாசமான வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. திங்கட்கிழமை அன்று இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
கமல்ஹாசனின் தூங்காவனம், விக்ரமின் கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இந்த வெப்சீரிஸை இயக்குகிறார். கதாபாத்திரத்திற்காக உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார் நடிகர் சரத்குமார் . பரபரக்கும் த்ரில்லர் காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருந்தாலும் குடும்பங்களை கவரும் வகையில் அனைத்து அம்சங்களும் இதில் அமைந்துள்ளது.

ஓடிடி தளத்திற்கு

ஓடிடி தளத்திற்கு

இதுவரை திரைப் படங்களில் மட்டுமே நடித்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த சரத்குமார் முதல் முறையாக ஓடிடி தளத்திற்கு நடிப்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்திற்கு "இரை" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X