தைரியம் தான் ஒரே ஒற்றுமை... வைரலாகும் சன்னி லியோன் பட தமிழ் டிரெய்லர்!

சன்னி லியோன் பட டிரெய்லர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை: நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையைப் பேசும் ஆவணப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு வெளியான இந்த டிரெய்லரை இதுவரை ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

ஆபாச பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது இவர் இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் வீரமாதேவி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

ஆபாச பட நடிகையாக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் கவர்ச்சி வேடங்களில் நடித்து, தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ள சன்னி லியோனின் வாழ்க்கை ஆவணப் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

வெப் சீரிஸ்:

வெப் சீரிஸ்:

கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பெற்றோருக்கு பிறந்தவர் சன்னி லியோன். அவரது இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜித் கவுர் - சன்னி லியோனின் சொல்லப்படாத கதை என்ற பெயரில் வெப் சீரிசாக எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் டிரெய்லர்:

தமிழ் டிரெய்லர்:

கரன்ஜித் கவுராக இருந்தவர் ஆபாச பட உலகுக்கு வந்து சன்னி லியோனாக எப்படி மாறினார் என்பது பற்றி அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பாலிவுட் ஸ்டார்:

பாலிவுட் ஸ்டார்:

இரண்டு நிமிடம் 22 வினாடிகள் ஓடக்கூடிய அந்த டிரெய்லரில் சன்னி லியோனின் பால்ய காலம் முதல் தற்போதை நிலை வரை காட்டப்படுகிறது. அடுத்த வீட்டு பெண்ணாக இருந்து, பாலிவுட் ஸ்டாரான சன்னி லியோன் என வர்ணிக்கப்படுகிறார் அவர்.

தைரியம் தான் ஒற்றுமை:

தைரியம் தான் ஒற்றுமை:

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களும் ஒன்று தான் என இந்தியாவில் உள்ள மக்கள் நினைக்கிறார்களே என சன்னி லியோனிடம் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சன்னி லியோன், இந்த எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை தைரியம் தான் என்கிறார்.

டிரெண்டாகும் டிரெய்லர்:

டிரெண்டாகும் டிரெய்லர்:

இரு தினங்களுக்கு முன்பு வெளியான இந்த டிரெய்லர் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதுவரை ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். வெப் சீரிசான இதன் முதல் சீசன் வரும் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனை ஆவலாக எதிர்பார்த்து பலரும் காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X