Leo Trailer: புதிய சாதனை படைத்த லியோ ட்ரெய்லர்..டபுள் குதூகலத்தில் விஜய் ரசிகர்கள்!

சென்னை: லியோ படத்தின் டிரைலர் வெளியான புதிய சாதனை படைத்துள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன்,கௌதம் மேனன்,மன்சூர் அலிகான், மிஷ்கின், பகத் பாசில், சாண்டி, அர்ஜூன் தாஸ்,பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

The trailer of Thalapathy Vijay starrer Leo is a new record

இத்திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த மாதம் 19-ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

விஜய் லியோ: லியோ படத்தின் இசை வெளியீட்டு கடந்த மாதம் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில், இசைவெளியீட்டு விழா, நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடந்து லியோ படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பியது. அதை தொடர்ந்து லியோ படத்தின் டிரெய்லர் நேற்று, சன் டிவி தொலைக்காட்சியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

டிரைலர்: இதையடுத்து நேற்று மாலை சரியாக 6.30 மணிக்கு லியோ படத்தின் டிரைலர் வெளியானது. இதில் டிரைலரின் ஆரம்பத்தில், விஜய் குரலில் குட்டி கதை தொடங்குகிறது. ஒரு சீரியல் கில்லர் நடு ரோட்டில் நின்று கொண்டு பார்க்கும் எல்லோரையும் கொல்றான். அவனை ஒரு சின்சியரான போலீஸ் அதிகாரி துப்பாக்கி எடுத்து திருப்பி சுட..அந்த துப்பாக்கி அவன் கையில் இருக்கு... நீ என்ன செய்வ? என விஜய்யின் குரல் ஒலிக்க சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

The trailer of Thalapathy Vijay starrer Leo is a new record

ரத்தம் தெறிக்கவிட்ட: கடைசியாக யாரோ ஒருத்தன் என்னை போல இருந்தால் நான் என்ன பன்ணுவேன் என கோபத்துடன் த்ரிஷாவை பார்த்து விஜய் கேட்கும் காட்சிகளுடன், குழந்தை, த்ரிஷாவுடன் ஒருக்கும் இன்னசெண்ட் விஜய் ஒரு பக்கம், ரத்தம் தெறிக்க கொலை செய்யும் விஜய் ஒரு பக்கம் என லியோ டிரெய்லர் ரசிகர்களுக்கு கூஸ்பம்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய சாதனை: இந்த ட்ரைலர் வெளியாகி சரியாக 5 நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஏற்கெனவே லியோ ட்ரைலரால் குஷியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் இந்த சாதனையால் டபுள் சந்தோஷத்தில் உள்ளனர். லியோ டிரைலர் 25.6 மில்லியனும், தெலுங்கில் 4.3 மில்லியனும், இந்தி 3.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X