விஜய் பாடலுக்கு தடை... பொங்கிய ப்ளூசட்டை மாறன்!
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடக்கும் ஆண்டு விழாவில் தவெக தலைவர் விஜயின் திரைப்பட பாடல்களை பயன்படுத்தக்கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழாவில் பொதுவாக சினிமா பாடல்களுக்கு மாணவர்கள் குழுவாக சேர்ந்து நடனமாடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பள்ளி ஆண்டு விழாவில் நடிகர் விஜயின் பாடல்களே பிரதான தேர்வாக இருக்கின்றன. தற்போது, தமிழக பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

பாடலுக்கு தடை: இதனால் பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாக்களில் விஜயின் பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடும் போது, கட்சியின் பெயரையும், கொடியையும் காண்பித்து மாணவர்கள் நடனம் ஆடுவது அதிகரித்து வருவதால் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜயின் திரைப்பட பாடல்களை இசைக்க வேண்டாம் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இசையின் தீவிர ரசிகர்கள் இசை நிகழ்ச்சி,கிரிக்கெட் மைதானம் எந்த மக்கள் அதிகமாக கூடுகிறார்களோ அந்த இடத்தில் கொடியை எடுத்து செல்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர்.
ப்ளூசட்டை மாறன் கேள்வி: இது பல நேரங்களில் சர்ச்சைக்கு வழி வகுப்பதால், பள்ளியிலும் இதுபோல சர்ச்ச வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் ஆண்டுவிழாவில் விஜயின் பாடலை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் ப்ளூசட்டை மாறன் பள்ளிகளில் பள்ளி வளாகத்தினுள் அனைத்து சினிமா பாடல்களையும் தடை செய்வது எப்போது? விஜய் பாடல்களை மட்டும் தடை செய்தால் போதுமா? என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











