The Vaccine War: ஒரே பாரத் புராணம் தான்.. காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் வாக்ஸின் வார் ட்ரெய்லர் இதோ!

மும்பை: தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள தி வேக்ஸின் வார் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியானது.

காஷ்மீரில் உள்ள இந்து பண்டிதர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொத்து கொத்தாக சுட்டுக் கொன்ற கதையை தி காஷ்மீர் ஃபைல்ஸ் படமாக இயக்கி தேசிய விருதை பெற்றிருந்தார் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி.

The Vaccine War Trailer: The Kashmir Files Director Next movie trailer out now

இந்நிலையில், இந்த படத்தில் நானா படேகர், காந்தாரா பட ஹீரோயின் சப்தமி கவுடா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள The Vaccine War திரைப்படம் கொரோனா எனும் கொடிய வைரஸை ஒழிக்க இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கிய தடுப்பூசி குறித்த கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

தி வேக்ஸின் வார் டிரெய்லர் ரிலீஸ்: விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் நானா படேகர், சப்தமி கவுடா, அனுபம் கெர், பல்லவி ஜோஷி, ரைமா சென், கிரிஜா ஓக், நிவேதிதா பட்டாச்சார்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள தி வேக்ஸின் வார் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கி பாலிவுட்டில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்ற விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி அடுத்ததாக தமிழ்நாடு ஃபைல்ஸ் படத்தை இயக்கப் போவதாக அறிவித்த நிலையில், அதற்கு முன்னதாக கொரோனாவை கட்டுப்படுத்திய தடுப்பூசி உருவான கதையை படமாக இயக்குகிறேன் என இந்த படத்தை இயக்கி உள்ளார்.

கொரோனா வைரஸ்: நாடு முழுவதும் கொரோனா பரவை தடுக்க தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அந்த தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் எப்படி தயாரித்தனர் என்கிற உண்மை கதையை தழுவி இந்த படத்தை எடுத்துள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார்.

ஆனால், கொரோனா பரவல் இல்லாத சூழலில் இந்த படம் வெளியானால் வெற்றியடையுமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாரத் புராணம்: பாஜக ஆதரவாளரான விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி பாஜகவின் சாதனை படமாகவே இந்த படத்தையும் எடுத்திருக்கிறார் என்பது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், டிரெய்லர் முழுவதுமே பாரத் என்கிற புராணம் தான் அதிகம் இருப்பதாகவும் இந்தியா வார்த்தையை முடிந்த வரையில் இயக்குநர் திட்டமிட்டே தவிர்த்துள்ளாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X