பூங்கொத்துடன் வந்த சிறுவர்கள்... கண்டுகொள்ளாத அசீம்... மக்கள் நாயகன் திருந்த வாய்ப்பே இல்ல ராசா!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், பிக் பாஸ் வீட்டில் அசீம் சக போட்டியாளர்களிடம் நடந்துகொண்ட விதம் பலருக்கும் அதிருப்தியளித்தது.
பெரும்பாலானோர் விக்ரம் தான் பிக் பாஸ் டைட்டில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால், பிக் பாஸ் போட்டிக்காக மட்டுமே தான் அப்படி நடந்துகொண்டதாக விளக்கம் கொடுத்த அசீம், தற்போது வெளியே வந்தும் திருந்தியதாக தெரியவில்லை.

டைட்டில் வின்னர் அசீம்
2022 அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, ஜனவரி 22ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் 6, மொத்தம் 106 நாட்கள் வரை நடைபெற்றது. வாரம் ஒருவர் எவிக்சன் ஆன நிலையில், இறுதிப்போட்டிக்கு கதிர், அமுதவாணன், மைனா நந்தினி, ஷிவின், விக்ரமன், அசீம் மட்டுமே தேர்வாகினர். இறுதியாக அசீம், விக்ரமன், ஷிவின் கிராண்ட் பினாலே மேடையில் ஏற, அதில் அசீம்க்கும் விக்ரமனுக்கும் பலத்த போட்டி காணப்பட்டது. இறுதியாக பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார்.

மக்கள் நாயகனின் மலேசிய சம்பவம்
நேர்மையாகவும் கண்ணியமாகவும் விளையாடிய விக்ரமன் தான் பிக் பாஸ் டைட்டில் கொடுத்திருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். அதேநேரம் அசீம் ரசிகர்கள் மக்கள் நாயகன் என்ற ஹேஷ்டேக்கை அவருக்கு ஆதரவாக ட்ரெண்ட் செய்தனர். அசீமும் தான் பிக் பாஸ் வீட்டில் தான் அப்படி இருந்தேன், வெளியே நல்லவன் என பஞ்ச் டயலாக் எல்லாம் பேசினார். இந்நிலையில், மக்கள் நாயகன் அசீம், மலேசியாவில் செய்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூங்கொடுத்துடன் வந்த சிறுவர்கள்
மலேசியாவில் நகை கடை திறப்பு விழாவிற்கு சென்ற அசீம்க்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது. இரண்டு சிறுவர்கள் அசீமை வரவேற்பதற்காக அவர் முன்பு பூங்கொத்துடன் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால், அதனை கண்டுகொள்ளாத அசீம், அந்த சிறுவர்களை புறக்கணித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். நீண்ட நேரமாக பூங்கொத்துடன் நின்றுகொண்டிருந்த சிறுவர்களை வேண்டுமென்றே அசீம் கண்டுகொள்ளாமல் சென்றது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அசீமின் இந்த செயலை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

மக்கள் நாயகன் திருந்த வாய்ப்பே இல்ல
பூங்கொத்துடன் வந்த சிறுவர்களை அசீம் பார்த்தும் பார்க்காமல் கடந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து அசீம் எப்போதும் திருந்த வாய்ப்பே இல்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த அசீம், என் மகன் கூட நான் நேரம் செலவழிக்க எனக்கு பல ஆயிரம் நாள் இருக்குடா. அந்த ஷோ பார்த்துதான் என் பையன் வளரனும்னு அவசியம் இல்ல என கோபமாக பேசியிருந்தார். அசீம் அப்படி பேசியது பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவருக்கு அட்வைஸ் செய்த கமலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இருப்பதாக சர்ச்சையானது. மேலும், கமல் போன்ற மூத்த நடிகரை இப்படி ஒருமையில் பேசலாமா எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











