உள்ள போனால் லவ் வரும்னு சொன்னேன்… ராபர்ட் கேட்கவில்லை… சொன்னது யாருன்னு தெரியுமா?

சென்னை: கடந்த 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் கோளாறு - நிவாஷினி காதல் கதை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர்.

ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா இருவரையும் பிக் பாஸ் போட்டியாளர்களே கலாய்த்து வரும் நிலையை தினமும் பார்க்க முடிகிறது.

சீனியர் ஜோடிகள்

சீனியர் ஜோடிகள்

பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு - நிவாஷினியின் அட்ராசிட்டிகள் ஊர் பஞ்சாயத்தை கூட்டியது. அதன்பின்னர் அசல் கோளாறு எவிக்சன் ஆகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இப்போது அசல் கோளாறு இல்லாத குறையை ராபர்ட் மாஸ்டர் அரங்கேற்றி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ராபர்ட் மாஸ்டருக்கும் ரச்சிதாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியில் விரசம் இல்லையென்றாலும், சில நேரங்களில் ரசிகர்களின் விமர்சனத்துக்கும் ஆளாகின்றது. பிக் பாஸ் வீட்டின் சீனியர் ஜோடியாக இருவரும் வலம் வருகின்றனர்.

கெஞ்சலும் மிஞ்சலும்

கெஞ்சலும் மிஞ்சலும்

இந்த வாரம் முழுவதும் ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா இடையேயான சீண்டல்கள் கொஞ்சம் அதிகரித்ததாகவே தெரிகின்றது. சாப்பிடாமல் அடம் பிடித்த ராபர்ட் மாஸ்டரை ரச்சிதா கண்டித்ததும், அதன் பின்னர் மாஸ்டர் சாப்பிட்டதும் பிக் பாஸ் வீட்டில் கலகலப்பை ஏற்படுத்தியது. அதேபோல், மழையில் நனைந்து கொண்டிருந்த ரச்சிதாவை ராபர்ட் மாஸ்டர் செல்லமாக திட்ட, அதற்கு ரச்சிதா கொடுத்த ரியாக்‌ஷன்களும் வைரலாகின. இந்நிலையில், இதுகுறித்து ராபர்ட் மாஸ்டரின் முன்னாள் மனைவி வனிதா பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் வரும்ன்னு சொன்னேன்

காதல் வரும்ன்னு சொன்னேன்

ராபர்ட் மாஸ்டர் - வனிதா இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டாலும், தொடர்ந்து நண்பர்களாக பழகி வருகின்றனர். இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா விவகாரம் குறித்து பேசியுள்ள வனிதா, "நான் முதலிலேயே ராபர்ட்டிடம் சொன்னேன், பிக் பாஸ் வீட்டிற்குள் போனால் கண்டிப்பாக இப்படியெல்லாம் நடக்கும். உள்ள போனா லவ் வரும், அப்படி எதும் வந்தா தயவுசெஞ்சு ஒதுங்கி போய்டு. உனக்கு இப்போ லவ் தேவையில்லை, அப்படி நடந்தாலும் அது உனக்கு பிரச்சினை தான்" என்றேன். ஆனால், "எல்லாத்துக்கும் ஆமாம் ஆமாம் சரிதான் என சொல்லிவிட்டு, இப்போ என்ன பண்றார்ன்னே எனக்கு தெரியல" எனக் கூறியுள்ளார்.

நானே எதிர்பார்க்கல

நானே எதிர்பார்க்கல

மேலும், "ராபர்ட் இப்படி பண்ணுவார்ன்னு நானே எதிர்பார்க்கல, என்ன செய்றோம்ன்னே தெரியாம எதாவது பண்ணி இப்படி தேவையில்லாமல் ராபர்ட் மாஸ்டர் நடந்துகொண்டு வருவதாகவும்" வனிதா பேசியுள்ளார். ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா பற்றி வனிதா பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், தற்போது வெளியான பிக் பாஸ் ப்ரோமோவிலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. கமல் கொடுத்த நிருபர் - செலபிரிட்டி டாஸ்க்கில் ரச்சிதாவிடம் ஏடாகூடமாக ராபர்ட் மாஸ்டர் கேள்விக் கேட்க, அதற்கு கோபமாக ரெட் பஸ்ஸரை அழுத்துகிறார் கமல். அதனால், இன்று கண்டிப்பாக ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா காதல் கதை பஞ்சாயத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X