twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பீச்சுக்கு போன பிக் பாஸ்.. முதல் சீசனில் இருந்த மாதிரி ஸ்ட்ரிக்டா இருங்க என ரசிகர்கள் உத்தரவு!

    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் உருவத்தை காட்டாமல் வெறும் குரலால் மட்டுமே ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களுடன் தொடர்பில் இருப்பவர் நடிகர் சதீஷ் சாரதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

    சாஷோ ஸ்பேஸ் எனும் இன்ஸ்டாகிராம் ஐடியில் செயல்பட்டு வரும் சதீஷ் சாரதி எப்போதாவது தான் போஸ்ட்டுகளை போடுவார்.

    தற்போது கடற்கரையில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்ட அவரிடம் ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    Work from Home-க்கு அனுமதி கேட்ட வந்தியத் தேவன்: ட்விட்டரை அலற விடும் பொன்னியின் செல்வன் டீம்Work from Home-க்கு அனுமதி கேட்ட வந்தியத் தேவன்: ட்விட்டரை அலற விடும் பொன்னியின் செல்வன் டீம்

    பிக் பாஸ் 6 வருது

    பிக் பாஸ் 6 வருது

    பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் இருந்து 5வது சீசன் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் என அனைத்தையும் பிக் பாஸ் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு சீசன் போட்டியாளர்களுக்கும் ஓட்டுக்களை போட்டு அவர்களை வெற்றியாளர்களாக மாற்றி வருகின்றனர். விரைவில் வரவுள்ள பிக் பாஸ் சீசன் 6க்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இந்த முறை பப்ளிக்

    இந்த முறை பப்ளிக்

    ஏற்கனவே பிக் பாஸ் முதல் சீசனிலேயே ஜூலி பப்ளிக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். மேலும், எந்தவொரு பிரபலமும் இல்லாத மாடல் நடிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹீரோ, ஹீரோயின்களாக வெளியேறி உள்ளனர். இந்நிலையில், இந்த முறை பொது மக்கள் பலருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அளித்து அதில் இருந்து ஒருத்தரை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேர்வாகி உள்ளார் என்றும் தகவல்கள் லீக்காகி உள்ளன.

    பிக் பாஸ் குரல்

    பிக் பாஸ் குரல்

    கமல்ஹாசனை போலவே கடந்த 5 சீசன்களாக பிக் பாஸ் நிகச்சியில் இருப்பவர் சதீஷ் சாரதி தான். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் காற்று வாங்கும் தனது புதிய போட்டோக்களை அவர் வெளியிட, நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ஷெரின் உள்ளிட்ட பிரபலங்கள் அந்த புகைப்படங்களை லைக் செய்துள்ளனர்.

    ஸ்ட்ரிக்ட்டா இருங்க

    ஸ்ட்ரிக்ட்டா இருங்க

    முதல் சீசனில் போட்டியாளர்களிடம் கடுமையை காட்டியது போல அடுத்தடுத்த சீசன்களில் சதீஷ் சாரதி ஸ்ட்ரிக்ட்டா இல்லை என்கிற குற்றச்சாட்டு இவர் மீதும் ரச்கர்கள் வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவரது போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த சீசனில் முதல் சீசனை போல ஸ்ட்ரிக்ட்டா இருங்க, லவ் ஜோடியை பிரிச்சு விடுங்க என கமெண்ட் பக்கத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் சதீஷ் சாரதியும் பிசியாகி விடுவார்.

    English summary
    The Voice of Bigg Boss Tamil Saasho Space shares few of his beach side photos in his instagram page and getting plenty of fans comments requesting being strict in Bigg Boss Tamil season 6.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X