தி வாரியர்” படத்தில், விசில் மஹாலக்ஷமி கலக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி !

சென்னை : ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகிவரும் படம் தி வாரியர்.

முதல் முறையாக தெலுங்கில் இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். தமிழிலும் படம் உருவாகி வருகிறது.

காதலர் தினத்தையொட்டி இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டியின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி

ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா போன்ற படங்களின் மூலம் சிறப்பான இயக்குநராக கோலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளவர் இயக்குநர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் படம் தி வாரியர்.

தி வாரியர் படம்

தி வாரியர் படம்

ராம் பொத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் இந்த படத்தின் மூலம் தெலுங்கிலும் கால் பதித்துள்ளார் லிங்குசாமி. இந்தப் படத்தில் ராம் பொத்தினேனியின் பர்ஸ்ட் லுக் முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் சிறப்பான காவல்துறை அதிகாரியாக அவர் காணப்பட்டார்.

காதலர் தின ஸ்பெஷல்

காதலர் தின ஸ்பெஷல்

இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டியின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவரது கேரக்டர் விசில் மகாலஷ்மி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலான மற்றும் போல்டான லுக்கில் காணப்படுகிறார் கீர்த்தி ஷெட்டி.

பிரம்மாண்ட தயாரிப்பு

பிரம்மாண்ட தயாரிப்பு

ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சீடிமார் படத்தை அடுத்து இந்தப் படத்தை தற்போது இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை

தேவிஸ்ரீ பிரசாத் இசை

படத்தில் ஆதி பினிஷெட்டி வித்தியாசமான வில்லனாக களமிறங்கியுள்ளார். அதேபோல அக்ஷரா கௌடா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X