twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர் தான் சினிமாக்காரனுக்கு கோயில்.. சீதா ராமம் பட விழாவில் மாஸ் காட்டிய பிரபாஸ்!

    |

    ஹைதராபாத்: கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வரும் நடிகர் பிரபாஸ் துல்கர் சல்மான் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள சீதா ராமம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    சீதா ராமம் படத்தை புரமோட் செய்ய பிரபாஸ் வந்ததை அறிந்ததில் இருந்து ரசிகர்கள் பிரபாஸ் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

    நிகழ்ச்சியில் பேசிய பிரபாஸ், தியேட்டர்கள் தான் சினிமாக்காரனுக்கு கோயில்களை போன்றது என்றார்.

    'இந்தியன் 2'வில் கமல்ஹாசனுக்கு ஜோடி இவரா?..ஷங்கர் போட்ட மாஸ்டர் பிளான்!'இந்தியன் 2'வில் கமல்ஹாசனுக்கு ஜோடி இவரா?..ஷங்கர் போட்ட மாஸ்டர் பிளான்!

    துல்கர் சல்மான் படம்

    துல்கர் சல்மான் படம்

    இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி உள்ள சீதா ராமம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், சீதா ராமம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

    மாஸ் காட்டிய பிரபாஸ்

    மாஸ் காட்டிய பிரபாஸ்

    பாகுபலி நாயகன் பிரபாஸ் சீதா ராமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சலார், ஆதிபுருஷ், பிராஜெக்ட் கே உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் நடிகர் பிரபாஸ் துல்கர் சல்மானுக்காக நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    தியேட்டர் கோயில் போன்றது

    தியேட்டர் கோயில் போன்றது

    நடிகர் பிரபாஸ் பேசும் போது சினிமாக்காரனுக்கு தியேட்டர் கோயில் போன்றது என பேசினார். என்ன தான் வீட்டில் பூஜை அறை இருந்தாலும், கோயிலில் கூட்டம் குறைகிறதா? என்ன? தியேட்டருக்கு வந்து படத்தை பார்ப்பது தான் சினிமாவை எப்போதும் வாழ வைக்கும் சீதா ராமம் அப்படியொரு படம் தியேட்டருக்கு சென்று தான் அந்த படத்தை பார்க்க வேண்டும் என பிரபாஸ் பேசியிருந்தார்.

    அப்படி பேச காரணம்

    அப்படி பேச காரணம்

    துல்கர் சல்மானின் ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களை தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் பார்க்கவில்லை. டோலிவுட்டில் பெரிய படங்களை தவிர தியேட்டருக்குச் சென்று ரசிகர்கள் பார்ப்பதை நிறுத்தி வருவதால், சீதா ராமம் படத்தையும் பொறுமையாக ஓடிடியில் பார்த்து விடாதீர்கள், தியேட்டருக்கு வந்து பாருங்கள் என்பதை உணர்த்தும் வகையிலேயே பிரபாஸ் அப்படி பேசி உள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

     இந்திய சினிமாவையே புரட்டிப் போடும்

    இந்திய சினிமாவையே புரட்டிப் போடும்

    பிரபாஸுக்கு நன்றி தெரிவித்து பேசிய சீதா ராமம் படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படம் இந்தியாவையே புரட்டிப் போடும் என பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட நடிகைகள் மற்றும் திரை பிரபல்ங்கள் கலந்து கொண்டனர்.

    English summary
    Actor Prabhas attended at Sita Ramam pre release function yesterday and give a massive speech and promote that movie to audience very well.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X