விடாமுயற்சி படம் விவேகம் 2 மாதிரி இருக்கு.. வசூலே இல்லை.. கஷ்டத்துல இருக்கோம்.. புலம்பும் பிரபலம்!

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வாரம் அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆன படம், விடாமுயற்சி. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கி, அனிருத் இசையமைத்த இந்தப் படத்தின் வசூல் குறித்து பலவிதமான கருத்துக்கள் உலா வருகிறது. இப்படியான நிலையில் விடாமுயற்சி படத்தின் வசூல் குறித்த கேள்விக்கு பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் பதில் கொடுத்துள்ளார், திரையரங்க உரிமையாளர், ஸ்ரீதர். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா , ஆரவ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரிலீஸ் ஆகும் அஜித் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தில் அஜித்திற்கு எந்த விதமான மாஸ் காட்சிகளும் இல்லை என ஏற்கனவே இயக்குநர் மகிழ் திருமேனி படம் ரிலீஸ்க்கு முன்னர் அளித்த பேட்டிகளில் தெரிவித்திருந்தார். ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு படம் பெரிய ஈர்ப்பினை ஏற்படுத்தாததால், படத்தின் வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Ajithkumar Sridhar Vidaamuyarchi Vijay

உலக சினிமா பார்த்தவர்களுக்கு விடாமுயற்சி படம் மிகவும் பிடித்துப் போனது, ஆனால் அஜித்தின் மாஸ் காட்சிகளை திரையில் பார்த்து சிலாகித்த ரசிகர்களுக்கு இந்தப் படம் ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லை. இப்படியான நிலையில் திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விடாமுயற்சி படம் குறித்த, கேள்விக்கு பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் பதில் கொடுத்துள்ளார்.

Ajithkumar Sridhar Vidaamuyarchi Vijay

வசூலில் அடி: இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், " விடாமுயற்சி படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அது வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் அஜித் செம கிளாஸாக உள்ளார். த்ரிஷாவின் போர்ஷன், அர்ஜுன், ஆரவ், ரெஜினா என அனைவரது போர்ஷனும் நன்றாக உள்ளது. ஆனால் கதையாக படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் வசூல் குறித்து லைகா நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்காதது, அவர்களின் பெருந்தன்மை.

Ajithkumar Sridhar Vidaamuyarchi Vijay

விவேகம் 2: விடாமுயற்சி படத்தினை விவேகம் 2 எனக் கூறுவதா இல்லை பீஸ்ட் 2 எனக் கூறுவதா எனத் தெரியவில்லை. பொதுவாக நான் கசப்பான அனுபவங்களை கடந்து போகின்ற பழக்கம் கொண்டவன். எனவே இதையும் கடந்து போக வேண்டும் என நினைக்கிறேன். ரிலீஸ்க்குப் பின்னர் மகிழ் திருமேனிக்கு போன் செய்து பேசினேன், அவர் பதில் எதுவும் கூறாமல், நேரில் பேசிக் கொள்ளலாம் எனக் கூறினார். திரையரங்க உரிமையாளர்கள் கஷ்டத்தில் உள்ளார்கள்"என அந்த பேட்டியில் கூறியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Ajithkumar Sridhar Vidaamuyarchi Vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X