twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஏசி தியேட்டர்னா 10000, நான் ஏசி 7000... சீக்கிரம் எடுத்து வைய்ங்க..!

    By Shankar
    |

    சென்னை: சென்னையில் முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கவிருக்கும் நான்கு நாள் சினிமா நூற்றாண்டு விழா செலவுக்குப் பணம் தேவை என்று கூறி பெரும் வசூல் வேட்டையில் திரையரங்க உரிமையாளர் சங்கம் இறங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இந்திய சினிமா நூற்றாண்டு விழா செலவுக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ 10 கோடியை அள்ளிக் கொடுத்திருக்கிறார். உண்மையில் அதில் பாதியாவது செலவாகுமா என்று தெரியவில்லை. ஆனால் சினிமாக்காரர்களோ ரூ 30 கோடி என முதல்வரிடம் கணக்கு கூறியுள்ளனர்.

    Theater owners allege illegal collection for Cinema 100 event

    இந்த நிகழ்ச்சிக்காக தமிழ் சினிமாவில் உள்ள எந்த அமைப்பும் தன் உறுப்பினர்களிடம் வசூல் செய்யக் கூடாது என கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளாராம் முதல்வர் ஜெயலலிதா.

    இதை அனைத்து சங்கங்களும் கடைப் பிடிக்கும் நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மட்டும் கண்டு கொள்ளவே இல்லையாம்.

    தங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்குப் போன் போட்டு, 'இந்திய சினிமா நூற்றாண்டு விழா செலவுக்கு பணம் வேண்டும். ஏ சி தியேட்டர்கள் ரூ 10 ஆயிரமும், ஏசி அல்லாத தியேட்டர்கள் ரூ 7 ஆயிரமும் செலுத்த வேண்டும். எப்போ தர்றீங்க' என்று நச்சரிக்க ஆரம்பித்துள்ளார்களாம்.

    சென்னையில் உள்ள தியேட்டர்களுக்கு மட்டும் இந்த நெருக்கடி இல்லையாம்.

    ஆர் எம் அண்ணாமலை, ரோகினி பன்னீர் செல்வம் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகினி பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமானவர்களான மதுரை கஜேந்திரன் மதுரை பகுதி திரையரங்குகளுக்கு போன் செய்து, உடனடியாக பணம் செலுத்துங்கள் என்று கேட்டதாக அப்பகுதி திரையரங்கு உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    தேனிப் பகுதியில் சுதீப் என்பவர், பன்னீர் செல்வம் சொல்லித்தான் நான் பணம் வசூலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    மற்ற மாவட்டங்களிலும் இதே போல பன்னீர் செல்வத்தின் சார்பில் பிரதிநிதிகள் வசூலில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    முதல்வர் பணம் வசூலிக்க வேண்டாம் என்று கூறிய பின்னரும் இப்படியெல்லாம் பணம் கேட்பது நியாயமா? இதுபற்றி முதல்வருக்குத் தெரியுமா... குறைந்தபட்சம் பிலிம்சேம்பருக்காவது தெரியுமா? என குமுற ஆரம்பித்துள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

    இன்று முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்த பிரச்சினை குறித்து புகார் தரவும் முடிவெடுத்துள்ளார்களாம்.

    இதுகுறித்து ரோகினி பன்னீர் செல்வத்தின் கருத்தை அறிய நீண்ட நேரம் முயற்சித்தும் அவர் தொடர்பு எல்லைக்குள் வரவே இல்லை!

    English summary
    Theater owners have alleged that their association heads compelling them to give money for Cinema 100 event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X