twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால் முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு.. தியேட்டர்களை மூட மறுப்பு‍!

    By Shankar
    |

    சென்னை: மே 30 முதல் காலவரையற்ற சினிமா ஸ்ட்ரைக் என விஷால் அறிவித்துள்ளதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து ஒரு கூட்டறிக்கை இன்று வெளியிட்டுள்ளது.

    Theater owners decides to run the shows from May 30th

    அதில், வருகின்ற 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல எனவும், 30.5.2017 (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், சென்னை நகர திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன், கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் தேனி விருதுநகர் சிவகங்கை மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவருமான திருப்பூர் சுப்புரமணியம், திருச்சி தஞ்சாவூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ்,
    திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் பிரதாப், வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி சீனிவாசன்
    தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு ஆர் செல்வின்ராஜ் ஆகியோரின் கையெப்பத்துடன் இந்த கூட்டறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

    இந்த நிகழ்வில் அனைத்து மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    English summary
    The Theater Owners Association has strongly objected Vishal cinema strike from May 30th
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X