தியேட்டர்காரர்கள் பொய்க் கணக்கு காட்டுவது உண்மைதான்! - கமலா தியேட்டர் உரிமையாளர்

By Shankar

படங்களின் வசூல் விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் பொய்க் கணக்கு காட்டுவது உண்மைதான் என்று கமலா தியேட்டர் உரிமையாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

கமலா சினிமாஸ் கணேஷ் இப்போது படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இப்போது தற்காப்பு என்ற படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.

ஒரு திரையரங்க உரிமையாளராக அவர் பகிர்ந்த அனுபவங்கள் இதோ...

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

திரையரங்கு அதிபராக உங்கள் அனுபவம் எப்படி?

அப்பா முதலில் புதுக்கோட்டயிலுள்ள பிரகதாம்பாள் என்கிற திரையரங்கை லீஸ் எனப்படும் குத்தகை முறையில் எடுத்து நடத்தினார். அதன்மூலம் திரையரங்கம் சார்ந்த அனுபவங்களைக் கற்றுக் கொண்டார். சென்னை வந்த போது முதலில் கிருஷ்ணவேனி என்கிற பழைய திரையரங்கத்தை வாங்கினார். அது பழையதாக இருக்கிறதே என்று புதிதாக ஒன்று கட்டநினைத்த போது கட்டியதுதான் கமலா திரையரங்கம். இந்த திரையரங்கம் 1972-ல் கலைஞர் அவர்களால் திறப்புவிழா செய்யப்பட்டு தொடங்கப் பட்டது. இதன் 25வது ஆண்டு விழாவிலும் கலைஞர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முதலில் ஏசி இல்லாமல் தொடங்கியது. பின்னர் ஏசி கொண்டதாக மாற்றப்பட்டது. பிறகு 2 அரங்குகளாக மாற்றிக் கட்டப்பட்டது. இப்போது ஆண்டுக்கு 120 படங்கள் வெளியாகின்றன. இத்தனை ஆண்டுகளில் பல ஆயிரம் படங்கள் வெளியாகியிருக்கும்.

சினிமா சிரமத்தில் இருக்கிறது, திரையரங்கம் பக்கம் கூட்டம் வருவதில்லை என்கிற பேச்சு இருக்கிறதே..?

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்று நல்ல மாதிரி படம் எடுப்பவர்கள் சொல்வதில்லை. எடுக்கத் தெரியாமல் எடுப்பவர்கள், திட்டமிடத் தெரியாமல் எடுப்பவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பது ஏமாற்று வேலை. இது மிகவும் பொய்யான தவறான கருத்து என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா இன்று நன்றாகவே இருக்கிறது. அன்று 10 அரங்கில் 50 நாட்கள் ஓடியபடம், இன்று 50 அரங்கில் 10 நாளில் வசூல் செய்து விடுகிறது. இன்றைய சூழல் மாறிவிட்டது. இனி 50 நாள் 100 நாள் என்று ஓடுவது சாத்தியமில்லை. அப்படி ஓடாததில் நஷ்டமும் இல்லை. ஏனென்றால் குறுகிய நாட்களிலேயே வசூல் செய்து விடுகின்றன. 1000 பேர் பார்க்கும்படி முன்பு சென்னையை 4 பகுதிகளாகப் பிரித்து சில அரங்குகளில் படங்கள் வெளியாகும். இன்று வடபழனி பகுதியிலேயே 9.000 பேர் பார்க்க முடிகிறது. சென்னையிலேயே 50க்குமேல் திரையரங்குகள் இருக்கின்றன. எனவே சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதைப்போலவே திருட்டு விசிடியால் வசூல் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்சினை இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

திருட்டு விசிடியால் பிரச்சினை இல்லை. பார்க்கிற மாதிரி நல்ல படம் வந்தால் பார்க்க வருவார்கள். 'பாகுபலி' எப்படி வசூல் செய்தது? 'பாபநாசம்' எப்படி வசூல் செய்தது? 'தனி ஒருவன்'எப்படி வசூல் செய்தது?

'தனி ஒருவன்' அதற்கு முந்தைய வசூல் சாதனை எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. வீட்டிலிருந்து விரைவில் போய்ப் பார்க்கிற தூரத்தில் சினிமா தியேட்டர் இருக்கும் போது யாரும் திருட்டுவிசிடி பக்கம் போவதில்லை. தியேட்டர் போய் பார்ப்பது ஒரு அனுபவம். அதை விரும்புகிறவர்கள் நல்ல படம் வரும்போது பார்க்கவே செய்கிறார்கள்.இதுதான் உண்மை, யதார்த்தமும் கூட.

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் புகார்கள் சொல்லப் படுகின்றனவே.?

இதை நான் மறுக்கவில்லை. திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் குறைகள் இருக்கின்றன. பிரச்சினைகள் இருக்கின்றன. டிக்கெட் விலையில் சொல்வது ஒன்று, விற்பது ஒன்று என்று இன்றும் நடக்கிறது.

500 டிக்கெட் விற்றால் 250 தான் விற்றது என்று பொய்க் கணக்கு காட்டுவதும் நடக்கிறது. கட்டணம் அதிகம், சுத்தமில்லை, வசதி இல்லை என்கிற நிலையும் இருக்கிறது. ஒரு திரையரங்கில் வாகனங்களுக்கு மணிக்கு 40 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். டிக்கெட் 120 ரூபாய்தான் வண்டிவிட 4 மணி நேரத்துக்கு 160 ரூபாய் என்றால் என்ன அநியாயம் இது? கடடணங்களால் இப்படி மக்களை கசக்கிப் பிழியக் கூடாது. சினிமா வளர நாங்கள் மட்டும் மாறினால் போதாது எல்லாரும் மாற வேண்டும்.

அப்படி என்ன உங்கள் திரையரங்கில் வசதிகள் உள்ளன?

எங்களைப் பொறுத்தவரை மல்டிப்ளக்ஸ் எனப்படும் சொகுசு திரையரங்குகளை விட, குறைந்த கட்டணம் நிறைவான வசதி கமலா அரங்கில் மட்டும்தான் என்பேன். இதை ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் என்றால் நான் சொல்லியிருக்க முடியாது. இப்போது எல்லாம் முறைப் படுத்தி மேம்படுத்தி நடத்தி வருகிறோம். இப்போது எனக்குத் தகுதி இருக்கிறது. என்னால் இப்போது சொல்ல முடியும்.

ஒருகாலத்தில் மணலைக் குவித்து டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தார்கள். பின்னர் தரை, பெஞ்ச், நாற்காலி, சோபா என்று மாறியிருக்கிறது அப்போது க்யூவில் நின்று வியர்க்க விறுக்க வெளியில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டும். இன்று நெட்டில் வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் எடுக்கலாம். இதனால் டிக்கெட் எடுக்கப் போய் வரவும், படம் பார்க்கப் போய் வரவும் என ஆகிற நேர விரயம் மிச்சம்.படம் பார்க்க பத்து நிமிடம் முன்பு வந்தால் போதும். எவ்வளவு சௌகரியம், பாதுகாப்பு, சுத்தம், நிம்மதி தெரியுமா? ப்ளாக் டிக்கெட்டுக்கு வேலையே இல்லை.

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

ஆன்லைனில் எடுப்பதால் இன்று எல்லாருடைய முகவரியும் பதிவாகி விடுவதால் குற்றச் செயல்கள் இல்லை. படம் பார்ப்பது இன்று பாதுகாப்பான அனுபவமாக மாறி இருக்கிறது. யார் தலையும் மறைக்காத வகையில் திரையரங்க இருக்கைகள் அமைப்பு உள்ளது. ஒலியமைப்பு சரிவரத் துல்லியமாகக் கேட்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

குடிப்பவர்களை புகைப்பவர்களை நாங்கள் திரையரங்குகளில் அனுமதிப்பதில்லை. இங்கே சிகரெட் விற்பதே இல்லை. முன்பெல்லாம் இடைவேளையில் மட்டும்தான் தின்பதற்கு ஏதாவது வாங்க முடியும். திடீரென்று ஒரு குழந்தை அழுதால் அதற்குப் பால் தேவைப்பட்டால் இப்போது உள்ளே உள்ள உணவகத்தில் வாங்க முடியும். எப்போதும் எதுவும் இப்படி உணவகத்தில் வாங்கிக்கொள்ள முடியும். டிக்கெட் எடுக்க காத்திருக்கும் இடமும் கூட ஏசி செய்துள்ளோம். இதற்கெல்லாம் காரணம் எங்களுக்குப் படம் பார்க்க வருகிறவர்களின் வசதிதான் முக்கியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X