விடிய விடிய நடந்த பஞ்சாயத்து… “பீஸ்ட்“ படத்தால் விஜய்க்கு வந்த சிக்கல்!
சென்னை : நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால் நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் ரா உளவு ஏஜென்ட்டாக வீரராகவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பீஸ்ட்
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் பீஸ்ட். மாஸ்டர் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றுத்தந்ததால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்ப்பு அதிகரித்தது. அதுமட்டும் இல்லாமல் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படமும் வெற்றி பெற்றதால் ஒட்டுமொத்த ரசிகர்களின் எண்ணமும் பீஸ்ட் திரைப்படத்தின் மீதே இருந்தது.

எதிர்மறை விமர்சனம்
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ந் தேதி வெளியாகி பல எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. விஜய் ரசிகர்களே படம் குறித்து மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் பீஸ்ட் படம் குறித்த மீம்ஸ்களை பதிவிட்டு நெல்சனை சகட்டுமேனிக்கு கிண்டலடித்து வருகின்றனர்.

காலியாக காணப்பட்டன
பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே கே.ஜி.எஃப் சேப்டர் 2 திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் சுமார் 800க்கும் அதிகமான திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் மட்டுமே திரையிடப்பட்டன. இதனால், பெரும்பாலான திரையரங்குகள் காலியாக காணப்பட்டன. ஆனால், கேஜிஎஃப் படத்திற்கோ டிக்கெட்டுகள் கிடைக்காமல் மக்கள் அலைந்து வந்ததை பார்க்க முடிந்தது. இதனால், பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படத்தை தூக்கிவிட்டு கேஜிஎஃப் 2 திரைப்படத்தை திரையிட்டு வருகின்றனர்.

நஷ்ட தொகை
இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் விஜய்யிடம் நஷ்ட ஈடு கேட்க இருப்பதாகவும், இதை அவர் மறுக்கும் பட்சத்தில் விஜய் வீட்டை முற்றுகையிட திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி நஷ்ட தொகை கொடுக்கவில்லை என்றால் விஜய் புதிய படத்தை திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்ற படலாம் என்று கூறப்படுகிறது. இதனால், விஜய்க்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











