LEO தியேட்டர் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா..? விஜய்யுடன் ஷுட்டிங்கில் இணைந்த பிரபலம்!
காஷ்மீர்: தளபதி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்னையை தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ ஷூட்டிங்கில், விஜய், த்ரிஷா, கெளதம் மேனன் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
காஷ்மீர் ஷெட்யூல் தொடங்கும் முன்பே லியோ படத்தின் சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் குறித்த தகவல்கள் வெளியாகிவிட்டன.
இந்நிலையில், இந்தப் படத்தின் ஒட்டுமொத்த தியேட்டர் ரைட்ஸ் மட்டுமே 100 கோடிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

லியோவில் இணைந்த பிரபலம்
விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மொத்த படக்குழுவும் தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ளது. தனி ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் காஷ்மீர் பறந்த லியோ டீம், படப்பிடிப்புத்தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இயக்குநர் மிஷ்கினும் காஷ்மீர் ஷெட்யூலில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அவர் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது காஷ்மீர் சென்றுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர்
இதனிடையே லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் கெளதம் மேனன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். கெளதம் மேனன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்தப் படத்தில் அவர் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிப்பதை அவரே ஒரு பேட்டியில் உறுதி செய்திருந்தார்.

அசத்தும் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ்
லியோ டைட்டில் ப்ரோமோவுடன் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ரிலீஸாகும் இந்தப் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி வாங்கியுள்ளது. அதேபோல், ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியது. சாட்டிலைட் உரிமை 80 கோடிக்கும், ஓடிடி ரைட்ஸ் 150 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே இப்போது தியேட்டர் ரைட்ஸ் பிசினஸ் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 400 கோடி பிஸினஸ்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநில தியேட்டர் ரைட்ஸை சேர்த்து மொத்தம் 175 கோடிக்கு விலை பேசப்பட்டுள்ளதாம். ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் இதுவரை எந்த தமிழ்த் திரைப்படமும் செய்யாத சாதனை இது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக தமிழ்நாட்டு தியேட்டர் ரைட்ஸ் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு பிஸினஸ் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் 17 கோடி வரை ஆஃபர் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி லியோ ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் மொத்தம் 400 கோடி வரை என தகவல் கிடைத்துள்ளது.

லோகேஷின் சம்பவம் லோடிங்
லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. ஓடிடி ஸ்ட்ரீமிங்கிலும் இந்தப் படம் சாதனை படைத்தது. இதனால்தான் லியோ ப்ரீ ரிலீஸ் பிஸினஸும் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதாம். இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், ஏஜெண்ட் டினா எனப்படும் டான்சர் வசந்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications