ப்ளூசட்டை மாறனுக்கு சரியான நோஸ்கட்...தடாலடி பதில் கொடுத்த தியேட்டர் நிர்வாகம்
சென்னை : அனைத்து படங்களையும் தாறுமாறாக விமர்சித்து வரும் ப்ளுசட்டை மாறனுக்கு தியேட்டர் நிர்வாகம் ஒன்று சரியான நோஸ் கட் பதில் ஒன்றை கொடுத்துள்ளது. இதனை நெட்டிசன்கள் உள்ளிட்ட பலர் வரவேற்று வருகின்றனர்.
டாப் ஹீரோக்களின் படங்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ப்ளூசட்டை மாறன். வலிமை படம் பற்றியும், அஜித் பற்றி இவர் பதிவிட்ட விமர்சனங்கள் கடும் சர்ச்சையானது. பலரும் இதை கடுமையாக எதிர்த்தனர். இருந்தாலும் கொஞ்சமும் சளைக்காமல் தன்னை விமர்சித்தவர்கள் பற்றியும் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

ப்ளூசட்டை மாறன் ட்வீட்
ப்ளூசட்டை மாறனை எதிர்த்து அஜித் ரசிகர்களையும் விமர்சித்து அவர் கருத்து பதிவிட்டார். வலிமை படத்தில் துவங்கிய விவகாரம் இதுவரை ஓயாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் டிரைலர் பெற்றுள்ள பார்வைகள் பற்றி ப்ளூசட்டை மாறன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தி லெஜண்ட் பட டிரைலருக்கு 25 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது.

பதிலடி கொடுத்த தியேட்டர்
இதனை மற்ற டாப் ஹீரோக்களின் படங்களின் டிரைலர்கள் பெற்ற பார்வைகளுடன் ஒப்பிட்டு ப்ளூசட்டை மாறன் ஒரு ட்வீட் போட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு வடுகநாதன் 4கே சினிமாஸ் நிர்வாகம் ட்விட்டரில் பதிலளித்துள்ளது. அதில், உங்கள் Anti Indian படம் எங்கள் திரையில் 2 ஷோ தான் ஓடுச்சு. அதிலும் 2 ஷோவையும் சேர்த்து மொத்தமாக 17 பேர் பார்த்தனர். பின் வேறு படத்தை மாற்றினோம். அண்ணாச்சி படம் உங்கள் படம் அளவிற்கு இருக்காது என்று நம்புகிறோம் என ட்வீட் போட்டுள்ளது.

நெட்டிசன்கள் ஆதரவு
இதற்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்தவங்கள குறை சொல்லி சம்பாதிக்கிற நீங்க எல்லாம் வாய் பேசலாமா? மற்ற படங்களை நல்லா இல்லை, நல்லா இல்லை என விமர்சித்த நீங்க நல்ல படம் எடுக்க வேண்டியது தான. அப்படி நல்ல படம் எடுத்துட்டு பேசிருக்கனும். இதே போல எல்லா தியேட்டர் உரிமையாளர்களும் முகத்தில் அடித்தது போல பதில் சொல்லியிருந்தா நல்லா இருக்கும்.

இதை ஒப்பிடுவதே தவறு
மற்ற படங்களை குறை சொல்லியே பப்ளிசிட்டி தேடிட்டு இருக்குது. இது சரியான பதில் ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்களை வைத்து நிறைய சம்பாதிக்க இப்படி பண்ணுறார். அதனால் தயவு செய்து இவரை பற்றி பேசுவதையே நிறுத்துங்க என சொல்லி வருகின்றனர். அதே சமயம் சிலர், ஆன்டி இந்தியன் படம் குறைந்த பட்ஜெட் படம். அதனால் இதில் பெரிய அளவில் வசூலை எதிர்பார்க்க முடியாது. அதனால் அந்த படத்துடன் மற்ற படங்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











