Rajini: வேட்டையன் 850 தியேட்டரில் ரிலீஸ்.. 1000 கோடி வசூல்.. அடித்து சொன்ன திருச்சி ஸ்ரீதர்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது. அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டக்குபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ள நிலையில், அமிதாப் பச்சன் மனித உரிமை கண்காணிப்பாளராக உள்ளார். இவர்கள் இருவரையும் எதிரும் புதிருமாக்கி திரையில் மோதவிட்டுள்ளார் இயக்குநர். வரும் பத்தாம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து, திரையரங்க உரிமையாளர் திருச்சி ஸ்ரீதர் பேட்டி அளித்துள்ளார்.

வேட்டையன்: அதில், வேட்டையன் படத்திற்கு மக்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு இந்த படம் வெளியாக இருப்பதால், இந்த படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றிப்பெற வேண்டும் என்ற திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் ஆசைப்படுகிறோம். அவர்கள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஹிட்டான பாடல்: தொடர்ந்து பேசிய அவர், வேட்டையன் படத்தின் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது. ஆனால், டிரைலர் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. என்னை பொறுத்தவரை படத்தின் பாடல், டிரைலர், டீசரை பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கும் என்று கருத்து சொல்ல முடியாது. படத்தை முழுமையாக பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்ல முடியும்.
ஜெயிலர் படத்தில் தமன்னாவின் பாட்டால் மட்டுமே படம் ஓடியது என்று சொல்லிவிட முடியாது. அந்த படத்தின் கதையே யாருக்கு போரடிக்காத வகையில் இருந்தது. அதே போல வேட்டையன் திரைப்படமும் இருந்தது என்றால் நிச்சயம் வேட்டையன் வெற்றிப்படமாக அமையும். இப்படம் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மற்ற திரையரங்குகளில் ஜீவா நடிப்பில் வெளியாக உள்ள பிளாக் திரைப்படம் வெளியாகும் என்றார்.
1000 கோடி வசூலா: மேலும், இந்தி ரைட்ஸ் வர்த்தகத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்துள்ளதால், வேட்டையான் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை பெரும் என்று பேச்சு இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். அதே போல, வேட்டையன் படம் காலை 9 மணிக்குத்தான் வெளியாகும் என்றும் அதிகாலை 4 மணிக்கு வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications