twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லைகர் படுதோல்வி..நஷ்டத்தை சமாளிக்க திரையரங்க உரிமையாளர் கொடுத்த ஆஃபர்..கடைசில இப்படி ஆகிபோச்சே!

    |

    சென்னை : விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளதால், திரையரங்க நிர்வாகம் சூப்பர் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

    பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள லைகர் படத்தில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகின இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி வெளியானது.

    ”நிறைய எதிரிகள் இருக்கிறார்கள்… என்கூட வேலை பார்த்தவங்க அப்படி சொன்னது இல்லை”: நித்யா மேனன் சுளீர்”நிறைய எதிரிகள் இருக்கிறார்கள்… என்கூட வேலை பார்த்தவங்க அப்படி சொன்னது இல்லை”: நித்யா மேனன் சுளீர்

    லைகர்

    லைகர்

    தன் அப்பா தவறவிட்ட சாம்பியன் பட்டத்தை பெற முயற்சிக்கும் மகனின் போராட்டம்தான் லைகர் படத்தின் கதை. மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தன் சொந்த ஊரிலிருந்து கிளம்பி மும்பை வருகின்றார் விஜய் தேவரகொண்டா. தனது தாய் ரம்யாகிருஷ்ணனுடன் சேர்ந்து தெருவோரத்தில் டீ கடை நடத்துகிறார்.

    பாவம் மைக் டைசன்

    பாவம் மைக் டைசன்

    இந்த கதையில் புது விஷயம் என்னவென்றால் அது குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் மட்டுமே அவரும் கடையில் இவரிடம் ஆடிவாங்குவதை பார்க்கும் போது என்னாடா இது என நினைக்க தோன்றுகிறது. 25ந் தேதி வெளியான இத்திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி அழதா குறையாக படத்தை விமர்சித்தனர். இணையத்தில் நெட்டிசன்கள் கண்டபடி விமர்சித்து வருவதால் லைகர் திரைப்படம் படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

    சூப்பர் ஆஃபர்

    சூப்பர் ஆஃபர்

    இந்நிலையில், நர்சிபட்டின திரையரங்க உரிமையாளர் லைகர் படத்தின் நஷ்டத்தை சரிக்கட்டும் விதமாக சூப்பர் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளார். நர்சிபட்டினத்தில் உள்ள மேக்ஸில் திரையரங்கில் இத்திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்திற்கு மக்கள் வராததால் திரையரங்கு காற்று வாங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், திரையரங்க நிர்வாகம் மூன்று டிக்கெட்டுகளைக் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என அறிவித்துள்ளது.

    பார்த்தே தீருவோம்

    பார்த்தே தீருவோம்

    இதற்காக அந்த நிறுவனம், பூரி ஜெகநாத்தின் சொந்த ஊரான பாபிராஜு கொத்தப்பள்ளி கிராமம் நேற்று வீடுவீடாக சென்று இந்த தகவலை மக்களுக்கு தெரிவித்துள்ளது. நர்சிபட்டினம் எம்.எல்.ஏ பெட்லா உமா சங்கர கணேஷின் சொந்த தம்பி பூரி ஜெகன்நாத் என்பதால், எம்.ஏ.வின் ஆதரவாளர்கள் இந்த படத்தை பார்த்தே தீருவோம் என்று கூறியுள்ளனர்.

    Read more about: liger லைகர்
    English summary
    Theatre owner at Narsipatnam Announces offer for Liger Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X