Ajithkumar: அஜித் மேல ரசிகர்கள் பைத்தியம் மாதிரி இருப்பார்கள்.. விஜய், சூர்யாவுக்கு அப்படி இல்லை!
சென்னை: ஒட்டுமொத்த உலகமுமே 2025க்காக தயாராகிக் கொண்டு உள்ளது. அப்படியான நிலையில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் எவையெல்லாம் தியேட்டர் ஓனர்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்தது என்பது குறித்தும், இந்த ஆண்டு வெளியான படங்கள் குறித்தும் சென்னையில் இருக்கக்கூடிய பிரபலமான தியேட்டர் ஒனர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர். அதில் நடிகர் அஜித் குறித்து பேசிய கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
அதாவது, இந்த ஆண்டு நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. கடைசியாக அஜித்குமாரின் நடிப்பில் வெளியான படம், துணிவு. இப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. படம் பெரும் வெற்றிப் படமாகவும் மாறியது. தற்போது அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகி வருகின்றது. லைகா தயாரிப்பில் விடாமுயற்சி மற்றும் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி. இதில் வரும் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. விடா முயற்சி படத்திற்கான டப்பிங் பணிகளை அஜித் முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது என படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

அஜித்குமார்: இப்படியான நிலையில், அஜித்குமார் குறித்த கேள்விக்கு திரையரங்க உரிமையாளர்களின் பதில் அஜித் ரசிகர்களையே எமோஷ்னல் அடையச் செய்துள்ளது. அதாவது அஜித் குறித்து வெற்றி திரையரங்க உரிமையாளர் கூறும்போது, " விஜய்யின் லியோ படத்திற்கு டிக்கெட் கேட்ட ரசிகர்கள், படத்தின் முதல் இரண்டு ஷோக்களில் எதாவது ஒரு ஷோவுக்கு டிக்கெட் கேட்டு வாங்கிச் சென்றார்கள். அதேபோல், கோட் படத்திற்கு முதல் நாளில் எதாவது ஒரு ஷோவுக்கு இருந்தால் போதும் என டிக்கெட் வாங்கினார்கள். ஆனால் அஜித் ரசிகர்கள் அப்படி கிடையாது. அவர்கள் கேட்பதே, முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் இருக்கா? இல்லையா?

முதல் நாள் முதல் காட்சி: இல்லை, என்றால் வேற தியேட்டருக்கு போவார்கள். ஆனால் இரண்டாவது ஷோவுக்கு டிக்கெட் உடனே வாங்க மாட்டார்கள். அஜித் ரசிகர்கள், அஜித்தை கொண்டாடுகின்றார்கள், அஜித்தே கடவுளே என்பது அவரது ரத்தம், நாடி, நரம்பில் ஊறிய ஒன்று" எனக் கூறினார். அதேபோல் ரோகிணி திரையரங்க ஓனர் கூறும் போது, அஜித்துக்கு இரண்டு ஆண்டுகள் மட்டும் இல்லை ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் படத்தை ரிலீஸ் செய்தாலும், ரசிகர்கள் வருவார்கள். அந்த அளவுக்கு அன்பு வைத்திருக்ககூடிய ரசிகர்களை அஜித் உருவாக்கி வைத்துள்ளார்" எனக் கூறினார்.

கிங்: அதேபோல் கமலா தியேட்டர் ஓனர் கூறும்போது, " படத்திற்கு எப்போதும் மாஸ் ஓப்பனிங் இருப்பதால்தான் தமிழ் சினிமா உலகில் அஜித்சார், கிங் ஆஃப் ஓப்பனிங் என இருக்கின்றார். அவரது ரசிகர்களைப் போல் மற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் அமைய பல ஆண்டுகள் ஆகும்" எனக் கூறினார். அதேபோல் வுட்லாண்ட்ஸ் தியேட்டர் ஓனர் அஜித் குறித்தும் அஜித் ரசிகர்கள் குறித்தும் கூறும்போது, தற்போது ஒரு படம் ரிலீஸ் ஆனது. அதன் நடிகர் டிவிட்டரில் எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் படம் ஓடவில்லை. அஜித் தனது படம் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லுவதில்லை. ஆனால் படம் வேற லெவலில் ஹிட் அடித்துவிடும்" எனக் கூறினார். இவர்களது கருத்து அஜித் ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











