twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொங்கல் பண்டிகை.. விஜய்யின் 'மாஸ்டர்' படத்துக்கு 6 காட்சிகள்.. தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு!

    By
    |

    சென்னை: விஜய் 'மாஸ்டர்' படத்தை 6 காட்சிகளாக திரையிட, தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    Recommended Video

    Master Crew திடீர் Tiruvannamalai Visit | Tamil Filmibeat

    மாநகரம், கைதி படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், மாஸ்டர்.

    முடிந்தது ஷூட்டிங்.. டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் விஜய் படத்தின் பிரமாண்ட கிளைமாக்ஸ் காட்சி! முடிந்தது ஷூட்டிங்.. டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் விஜய் படத்தின் பிரமாண்ட கிளைமாக்ஸ் காட்சி!

    விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயின். விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

    கல்லூரி பேராசிரியர்

    கல்லூரி பேராசிரியர்

    நடிகை, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் விஜய், கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

    பொங்கல் ரிலீஸ்

    பொங்கல் ரிலீஸ்

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

    அதிக எதிர்பார்ப்பு

    அதிக எதிர்பார்ப்பு

    வரும் 13 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ரசிகர்களும் திரைத்துறையினரும் அதிகம் எதிர்பார்க்கின்றனர். கொரோனாவுக்கு பிறகு வெளியாகும் முதல், பெரிய ஹீரோ படம் 'மாஸ்டர்' என்பதால், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. 'மாஸ்டர்' படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வந்தால், அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து வருவார்கள் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.

    வாபஸ் பெற்றது

    வாபஸ் பெற்றது

    இதற்கிடையே பொங்கலுக்கு நூறு சதவிகித இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், இதை எதிர்த்த மத்திய அரசு, ஐம்பது சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியது.
    இதனால், அந்த அறிவிப்பை வாபஸ் பெற்ற தமிழக அரசு, 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

    பொங்கல் பண்டிகை

    பொங்கல் பண்டிகை

    அதே நேரத்தில், கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் படத்துக்கு கூடுதலாக, இரண்டு காட்சிகளை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மொத்தம் 6 காட்சிகளை திரையிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    English summary
    For Pongal, the Theatre owners have decided to screen 6 shows of Vijay's 'Master' in theaters
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X