நடிகை ஜோதிகாவின் படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவதா..? தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு!

By

சென்னை: ஜோதிகா நடித்துள்ள படத்தை வெளியிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Recommended Video

சூரியாவின் படங்கள் திரையிட மாட்டோம் | Theatre council அறிக்கை

ஜோதிகா நடித்துள்ள படம், பொன்மகள் வந்தாள். இதை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகிய நடித்துள்ளனர்.

லாக்டவுன்

லாக்டவுன்

கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ள இந்த படத்தை, சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப் படம் மார்ச் இறுதியில் திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா பிரச்னை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் ஆகவில்லை. ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. லாக்டவுன் முடிந்து தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

கேள்விக்குறி

கேள்விக்குறி

இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் ரிலீஸ் ஆகும் என்பதும் கேள்விகுறியாகவும் இருக்கிறது. ரிலீஸ் நேரத்தில் தியேட்டர் கிடைக்குமா என்பதிலும் சிக்கல். அப்படி ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

இதனால், படங்களை நேரடியாக OTT -யில் வெளியிட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். தெலுங்கு, இந்தி உட்பட சில மொழிகளில் இப்படி சில படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் பிரைமில் நேரடியாக வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

தியேட்டர் உரிமையாளர்கள்

தியேட்டர் உரிமையாளர்கள்

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: திரையரங்குக்காக தயாரிக்கப்பட்ட படங்கள், அதில் வெளியான பிறகுதான் மற்ற மீடியாக்களில் வெளிவரவேண்டும் என்பதுதான் விதி.

கண்டிக்கிறோம்

கண்டிக்கிறோம்

அதை மீறி, பொன்மகள் வந்தாள் படத்தின் தயாரிப்பாளர் அந்தப் படத்தை OTT பிளாட்பார்முக்கு கொடுத்துவிட்டார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபற்றி அந்த தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு, அதில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் கேட்கவில்லை. இதை மீறி அவர்கள் வெளியிடும் பட்சத்தில், அவர்கள் தயாரிக்கும் படங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய படங்களை OTT -யிலேயே வெளியிட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளோம்.

தேவையில்லை

தேவையில்லை

அந்தத் திரைப்படங்கள் எங்கள் திரையரங்குகளுக்கு தேவையில்லை என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடிகை ஜோதிகாவின் கோயில் பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், இப்போது இந்தப் பிரச்னை, சினிமா வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X