»   »  ஸ்டிரைக் முடிகிறது: தியேட்டர்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படக்கூடும்

ஸ்டிரைக் முடிகிறது: தியேட்டர்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படக்கூடும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேளிக்கை வரி விதிப்பு குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசு 30 சதவீத கேளிக்கை வரியை விதித்துள்ளது. இதை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Theatre strike to end soon: Abirami Ramanathan

இது தொடர்பாக சினிமா துறையினர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறியிருப்பதாவது,

கேளிக்கை வரி குறித்து அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை தியேட்டர்கள் மீண்டும் செயல்படும்.

இருப்பினும் இதுவரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.

English summary
Theatre Association President Abirami Ramanathan said that talks with the TN government about the entertainment tax is progressing and expecting the issue to be solved by today evening.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil