twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நன்கொடை.. கையோடு கோரிக்கையும்!

    |

    சென்னை: திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கதினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து கொரோன நிவாரண நிதியாக 50 லட்ச ரூபாய் வழங்கினர்.

    கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா இரண்டாவது அலை தற்போது முற்றிலும் குறைந்துள்ளது.

    திகைப்பூட்டும் பல திருப்பங்கள்... பரபரப்பான வழக்கு… ராஜகோபால், ஜீவஜோதி கதை படமாகிறது !திகைப்பூட்டும் பல திருப்பங்கள்... பரபரப்பான வழக்கு… ராஜகோபால், ஜீவஜோதி கதை படமாகிறது !

    கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது தமிழக அரசுக்கு, பல்வேறு கட்சியினர், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினர்.

    ரூ.50 லட்சம் நன்கொடை

    ரூ.50 லட்சம் நன்கொடை

    இந்நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

    சிரமங்களை கூறினோம்

    சிரமங்களை கூறினோம்

    அப்போது பேசிய அவர்,

    தமிழ்நாடு திரையரங்கம் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் முதல்வரை சந்தித்து கொரோன நிவாரண நிதியாக 50 லட்சம் நிதி அளித்துள்ளோம். திரையரங்க உரிமையாளர்களுக்கு உள்ள சிரமங்களை முதல்வரிடம் கூறினோம்.

     தயாராக இருக்கிறோம்

    தயாராக இருக்கிறோம்

    இந்த அரசு கலை துறையினருக்கு உறுதுணையாக இருக்கும் என முதல்வர் கூறினார். திரையரங்குகளை விரைவில் திறப்பார்கள் என நம்புகிறோம். அரசு கூறும் விதிமுறைகளுக்கு உட்பட்டு திரையரங்குகளை திறக்க தயாராக இருக்கிறோம்.

    குறைவான கட்டணம்

    குறைவான கட்டணம்

    திரையரங்கங்கள் திறக்கப்பட்டால் தயாரிப்பாளர்கள் ஒடிடி நோக்கி செல்லமாட்டார்கள். இந்தியாவிலே மிக குறைவான கட்டணம் தமிழ்நாடு திரையரங்குகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்போதைய கட்டணம் போதுமானதாக உள்ளது... இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Theatres and Multiplex association donates rupees 50 lakh for CM relief fund. Thiruppur Subramaniyam requesting CM to open the theatres.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X