twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நவம்பர் 1ந் தேதி முதல்.. திரையரங்குகளில் 100சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி… தமிழக உத்தரவு !

    |

    சென்னை : திரையரங்குகள் நூறு சதவீதம் பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    சின்னப்பொண்ணுவிடம் அத்துமீறியது சரியா… பிரியங்காவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியது கமல்!சின்னப்பொண்ணுவிடம் அத்துமீறியது சரியா… பிரியங்காவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியது கமல்!

    கொரோனா 2வது அலை காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.

    கொரோனா 2வது அலை

    கொரோனா 2வது அலை

    நாடு முழுவதும் கொரானா தொற்று அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது, தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    100 சதவீத பார்வையாளர்கள்

    100 சதவீத பார்வையாளர்கள்

    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் தளர்வுகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    வரவேற்பு

    வரவேற்பு

    அதேபோல, சினிமா படப்பிடிப்புகளுக்கு முழு அனுதமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    மேலும் சில தளர்வுகள்

    மேலும் சில தளர்வுகள்

    அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டுமே செயல்பட விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதிகப்படுகிறது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, எனிமி, வாடீல் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு சினிமா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ஓடிடியில்

    ஓடிடியில்

    சூரரைப் போற்று படத்துக்கு பிறகு தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாக உள்ளது.

    English summary
    The Tamil Nadu government’s move permitting 100 per cent seating capacity in cinema theatres.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X