Don't Miss!
- Technology
ChatGPT க்கு ஆப்பு.. சுந்தர் பிச்சையின் சூப்பர் ஐடியா.. Google-ன் ஆட்டம் இனி வேற மாதிரி இருக்கும்!
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வீடு வீடாக திண்ணை பிரச்சாரம்.. திமுக சாதனைகளை கூறும் மா.சுப்பிரமணியன்!
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Finance
அதானி, அம்பானி வெளியேற்றம்.. உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரு இந்தியர் கூட இல்லை..!
- Automobiles
இதுவரையில் இல்லாத உச்சம்... ஒரே மாதத்தில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! ஹூண்டாயை கையில் பிடிக்க முடியாதே
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அரங்கம் முழுவதும் 4 நாட்கள் செம்ம கலக்ஷன்....அரண்மனை 3
சென்னை : இயக்குனர் சுந்தர் சியின் திரைப்படங்கள் என்றாலே திருவிழா போல களைகட்டும் அதிலும் இப்பொழுது வெளியாகியுள்ள அரண்மனை 3 விஜயதசமி பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.
Recommended Video
காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் ஹாரர் கதைக்களத்தில் உருவாக்கியுள்ள அரண்மனை 3ல் ஆர்யா முதல் முறையாக பேயாக நடித்து உள்ளார்.
பிக்பாஸ்
வீட்டுல
அவங்க
2
பேரும்
எலியும்
பூனையுமாயிட்டாங்க..
அப்போ
சம்பவம்
இருக்கு!
பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இந்த திரைப்படம் பண்டிகை தினத்தில் வெளியாகி அரங்கம் முழுவதும் சிரிப்பலையில் வெற்றி நடை போடுகிறது..

மூன்றாவது பாகம்
அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது மூன்றாவது பாகம் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பாக இவரது திரைப்படங்கள் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய கலகலப்பான காமெடி படங்களாக இருக்கும்.

காமெடி கலந்த ஹாரர் கதை
அரண்மனை 1 மற்றும் 2 எந்த ஃபார்முலாவில் உருவானதோ அதே பார்முலாவில் அரண்மனை 3ம் காமெடி கலந்த ஹாரர் கதை களத்தில் உருவாகி உள்ளது. நடிகர் ஆர்யா பேய் என்றால் பயம் ஆனால் இந்த படத்தில் பேயாக நடித்துள்ளது புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.

வயிறு குலுங்க சிரிக்க
ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ,விவேக், யோகி பாபு, நளினி, மனோபாலா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்க விஜயதசமி பண்டிகை தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டுள்ளது. காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அதே சமயம் திடீரென பேய் வந்து மிரட்டுகிறது.

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை குஷ்புவின் அவ்னி மூவிஸ் தயாரித்து இருக்க உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் தியேட்டர் அனுபவத்தை மிகவும் மிஸ் செய்வதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

குடும்பத்துடன் பார்த்து
இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டே வரும் சூழலில் குடும்பங்கள் கொண்டாடும் கலகலப்பான திரைப்படமாக அரண்மனை 3 வெளியாகி திரையரங்குகள் முழுவதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிறைந்து திருவிழா போல காட்சி அளிக்கிறது. வழக்கமான பேய் கதையாக இருந்தாலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கின்ற மிகச்சிறந்த காமெடி படமாக இப்படம் இருப்பதால் அனைத்து வயதினரும் பார்த்து சிரித்து மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

விடுமுறை நாட்களை
படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் சரியான நேரத்தில் பக்காவாக பிளான் செய்து தமிழ்நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விடுமுறை நாட்களை அழகாக திட்டம் தீட்டி படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தின் விமர்சனங்களை தாண்டி நேராக தியேட்டர் சென்று குடும்பங்களாக படம் பார்த்து மகிழ்கின்றனர் பலரும் . சுந்தர்சியின் வெற்றி என்பது கதை திரைக்கதையை தாண்டி சரியான நேரத்தில் தியேட்டரில் ரிலீஸ் செய்ததுதான் சாமர்த்தியம் என்று படத்தின் குழுவினர் முடிவெடுத்து வெற்றியும் கண்டுள்ளனர்.