twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அசுரன் தியேட்டர் எண்ணிக்கை அதிகரிப்பு… முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனுஷ்

    |

    சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் கடந்த வியாழனன்று வெளியானது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் சுமார் 450 தியேட்டர்களில் காலை 8 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இதுபோன்ற சிறப்புக்காட்சிகள் பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித்குமார் போன்ற நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த பட்டியலில் தனுஷும் இணைந்துள்ளார்.

    கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் அசுரன். இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் அம்மு அபிராமி, டி.ஜே.அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், கென் கருணாஸ், பசுபதி, சுப்ரமணியம் சிவா, பவன், ஆடுகளம் நரேன், நித்திஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    Theatres increased for Asuran Movie Special show

    ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி சூப்பர் ஹிட்டானதால், அப்போதே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பும், வசூலும் பெற்று வருகிறது. பொதுவாக தமிழ்நாட்டில் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படம் வெளியாகும் போது காலையில், சிறப்பு காட்சிகள் எதுவும் இருக்காது. உச்ச நடிகர்கள் நடித்த திரைப்படங்களுக்கு மட்டுமே காலையில் சிறப்பு காட்சிகள் இருக்கும்.

    Theatres increased for Asuran Movie Special show

    அசுரன் பிரிப்பவன் அல்ல பிணைப்பவன் தான்-இயக்குநர் பாரதிராஜாஅசுரன் பிரிப்பவன் அல்ல பிணைப்பவன் தான்-இயக்குநர் பாரதிராஜா

    நிலைமை இவ்வாறிருக்க, கடந்த வியாழன்று தனுஷ் நடித்த அசுரன் படம் வெளியானது. சென்னையில் மட்டுமே ஒரு சில தியேட்டர்களில் காலை 8 மணி சிறப்பு காட்சிகள் இருந்தது.

    கடந்த வியாழனன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் காலை 8 மணி சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 450 தியேட்டர்களில் சிறப்புக்காட்சிகள் நடைபெற்றது.

    Theatres increased for Asuran Movie Special show

    கர்நாடகாவில் மட்டும் 90 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கூடுதலாக மேலும் 5 தியேட்டர்கள் சேர்க்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களிலும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது .

    இதுபோன்ற சிறப்புக்காட்சிகள் பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித்குமார் போன்ற நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த பட்டியலில் தனுஷும் இணைந்துள்ளார்.

    English summary
    Dhanush starrer 'Asuran' directed by Vetrimaran was released on Thursday. Around 8:30 pm specials were screened in about 450 theaters in various cities across Tamil Nadu, including Chennai. Such appearances are usually only possible for actors like Rajinikanth, Vijay, Ajit Kumar. Now, Dhanush also joins the list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X