அய்யய்யோ.. தியேட்டர்லாம் பழையப்படி ஃபார்முக்கு வர அவ்ளோ நாளாகுமாம்.. பீதியை கிளப்பும் உரிமையாளர்கள்!
சென்னை: தியேட்டர்கள் எல்லாம் பழையப்படி ஃபார்முக்கு வர பல மாதங்கள் ஆகும் என தியேட்டர் உரிமையாளர்கள் பீதியை கிளப்பியுள்ளனர்.
Recommended Video
எந்திர வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக திகழ்வது தியேட்டர்கள்தான். சீப் அன்ட் பெஸ்ட் என்டெர்டெயின்மென்ட் ஸ்பாட் என்றாலும் பட்டியலில் முன்னிலை வகிக்கும் இடமாக பீச்சுக்கு பிறகு தியேட்டர்கள்தான் இருக்கும்.
ஆனால் கொரோனா வைரஸின் லாக்டவுன் காரணமாக கடந்த இரு மாதங்ளாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சோஷியல் டிஸ்டன்ஸை கடைப்பிடிக்கும் வகையில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

அப்படி கூறினார்கள்
ஆனால் எதுவும் தியேட்டர் பிஸ்னஸை தடுக்காது என தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். திருப்பூரை சேர்ந்த எம்ஜிபி கிராண்ட் சினிமாஸ் ஓனர் ஆர் சதீஷ் பேசுகையில், டிவி வந்தபோது, பெரிய திரைகள் அழிந்துவிடும் என்றார்கள். டிவிடிகள் முதல் மொபைல் போன்கள், ஐபிஎல் போட்டிகள் வந்த போதும் இதையேதான் கூறினார்கள்.

மக்களின் பாதுகாப்பு
தற்போது ஓடிடி தளங்கள் மற்றும் கொரோனா வைரஸ் வரை, நாங்கள் அனைத்தையும் எதிர்த்துப் போராடுகிறோம். எத்தனை இடறுகள் வந்தாலும் தியேட்டர் தொழில் சாகாது என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதேபோல் உதயம் சினிமாஸ் சண்முகசுந்தரம் பேசுகையில், தியேட்டருக்கு வரும் மக்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம்.

மாஸ் நடிகர்களின் படங்கள்
சமூக விலகல் மற்றும் தூய்மை போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும்போது, திரைப்பட பார்வையாளர்களின் மனதில் எந்த பயமும் இருக்காது என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் முன்னணி நடிகர்களின் படங்கள்தான் முதல் 3 நாட்கள் ஹவுஸ் ஃபுல்லாகும். மற்ற நடிகர்களின் படங்கள் 30% முதல் 50% பார்வையாளர்களுடன்தான் ஓடும் என தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்குள்..
இதுதொடர்பாக பேசியுள்ள விநியோகஸ்தரான எஸ் பிக்சர்ஸ், ஸ்ரீனிவாசன் தியேட்டர்கள் பழையப்படி ஃபார்முக்கு வர லாக்டவுனுக்கு பிறகு மூன்று முதல் 4 மாதங்கள் வரை ஆகும். தீபாவளிக்குள் தியேட்டர்கள் பழைப்படிப்படி ஃபார்முக்கு வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











